பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் செய்யும் குறும்புகள்!!!
Page 1 of 1
பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் செய்யும் குறும்புகள்!!!
அனைவருக்குமே பள்ளிப்பருவம் தான் மிகவும் மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருக்கும். ஏனெனில் அந்த பருவத்தில் விளையாட்டோடு, பரீட்சை டென்சன் மற்றும் பல செயல்கள் இருக்கும். அதிலும் அவ்வாறு பள்ளி பருவம் முடிந்ததும், சற்று வாழ்க்கையின் இடுத்த படியாக காலேஜ் படிப்பிற்கு செல்வோம். ஆனால காலேஜ் படிக்கும் போது, அனைவருமே பள்ளிப் பருவத்தை தான் மிஸ் செய்வது போல் வருந்துவோம். ஏனென்றால் பள்ளிப் பருவம் போல் எதுவுமே வராது. அந்த நாட்களில் செய்த சிறு சிறு குறும்புகளை யாராலுமே மறக்க முடியாது.
சொல்லப்போனால், வாழ்க்கை என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு முன்னேறி செல்வது தான். இவ்வாறு வாழ்க்கையில் எந்த ஒரு நிலைமைக்கு முன்னேறி சென்றாலும், அனைவருக்குமே மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம் என்னவென்று கேட்டால், அது நிச்சயம் பள்ளிப் பருவம் தான். சரி, இப்போது அந்த பள்ளிப் பருவத்தில் மாணவர்களாக இருக்கும் போது என்னனென்ன சுட்டித் தனங்களை செய்வோம் என்பதை சற்று நினைவூட்டிப் பார்ப்போமா!!!
Funny Things
* பள்ளிப் பருவத்தில் செய்யும் ஒரு நகைச்சுவையான ஒரு விஷயம் என்றால், அது வகுப்பில் பாடம் எடுக்கும் போது, ஆசிரியர் கரும்பலகையில் சாக்பீஸை வைத்து எழுதும் போது, ஒருவரை ஒருவர் அழைத்துப் பேசுவதற்கு அதே சாக்பீஸை பயன்படுத்துவோம். சில சுட்டித்தனமான மாணவர்கள் அந்த சாக்பீஸை ஆசிரியர்கள் மீது தூக்கிப் போட்டு விளையாடுவர்.
* எபோதுமே வகுப்பறையில் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்ஸ் தான் செய்வார்கள். அதில் முக்கியமான ஒரு குறும்பு என்றால், அது பாடம் எடுக்கும் போது, முன்னால் இருப்பவர்கள் மீது, ஏதேனும் நகைச்சுவையாக எழுதிவிடுவர். அதிலும் "நான் ஒரு முட்டாள்" போன்ற வாக்கியங்களை எழுதுவர். நீங்கள் எழுதியிருக்கிறீர்களா?
* அனைவருக்கும் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் தான், டேபிள் அல்லது நோட்டில் ஏதாவது ஒன்றை வரைவது. அதிலும் இந்த மாதிரியான செயல்கள் வகுப்பு போர் அடிக்கும் போது செய்வார்கள். சில நேரங்களில் அப்போது தான், படம் வரைவதற்கு, அழகாக எழுதுவதற்கு பழகுவது என டேபிளில் தங்களது பெயரை எழுதுவது அல்லது படத்தை வரைவது என்பனவற்றை செய்வார்கள். நீங்கள் இது போல் எழுதியது உண்டா?
* ஆசிரியர் வரும் போது, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, ராகத்துடன், எழுந்து நின்று "குட் மார்னிங்ங்ங்ங்ங்ங்ங் மிஸ்ஸ்ஸ்ஸ்" என்று சொல்லும் போது வரும் ராகத்திற்கு அளவே இருக்காது. சில மாணவர்கள் இன்னும் இழுத்து சொல்வார்கள். நீங்க சொல்லிருக்கீங்களா?
* சில நேரங்களில் கடைசி பென்ச்சில் உட்காரும் மாணவர்கள், தங்கள் முன் இருப்பவர்கள் மீது ஏதாவது எழுதியோ அல்லது வரைந்தோ விடுவர். இந்த விஷயம் அந்த மாணவனுக்கு தெரிந்து விட்டால், அப்போது வரும் சண்டைக்கு அளவே இருக்காது. சொல்லப்போனால், அந்த சண்டையை மறக்கவே முடியாது.
* மற்றொரு சுட்டித்தனம் என்றால், அது உட்காரும் சீட்டில் தண்ணீரை விடுவது. அதாவது ஒன்றாக அனைவரும் எழும் போது, முன்னால் இருக்கும் மாணவன் உட்காரும் இடத்தில் தண்ணீரை விட்டு, அவர்கள் உட்கார்ந்த பின், அவர்களது பின்னால் ஈரமாக இருக்கும். அந்த ஈரத்துடன் எழுந்து நடக்கும் போது, அதைப் பார்க்கும் மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பாக இருக்கும். என்ன உங்களுக்கு இந்த நிகழ்ச்சி அல்லது இது போன்ற செயல்களை செய்ததுண்டா?
* முக்கியமான ஒரு மறக்க முடியாத இனிமையான அனுபவத்தில் ஒன்று தான் ஆசிரியரின் முகத்தை ஆசிரியர் வரும் போது கரும்பலகையில் வரைந்திருப்பது. இதைப் பார்க்கும் ஆசிரியருக்கு யார் செய்தது என்பதைத் தெரிந்து கொள்ள கடுமையான கோபம் வரும் போது, அது மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மேற்கூறிய அனைத்து செயல்களுமே, பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் செய்யும் சுட்டித்தனங்கள். நீங்கள் இவற்றில் எதை செய்துள்ளீர்கள் அல்லது வேறு என்ன செய்தீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்....
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இலங்கை பிரச்சினை: வேலூரில் ஐ.டி.ஐ. மாணவர்கள்-வணிகர்கள் ஆர்ப்பாட்டம்இலங்கையில் தனிஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் ஐ.டி.ஐ. மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மறியல் செய்தனர். அப்போது
» விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
» மாணவர்கள் வெற்றிக்கு ஏழு வழிகள்
» மாணவர்கள் திருப்பணி மேற்கொண்ட மகாதேவன் ஆலயம்
» கலாசாரத்தை சீரழிக்கும் கல்லூரி மாணவர்கள்!
» விதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால்? கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்!
» மாணவர்கள் வெற்றிக்கு ஏழு வழிகள்
» மாணவர்கள் திருப்பணி மேற்கொண்ட மகாதேவன் ஆலயம்
» கலாசாரத்தை சீரழிக்கும் கல்லூரி மாணவர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum