காலையில் தினமும் முட்டை! உடல் ஆகுமே 'சிக்'!!
Page 1 of 1

Health Tips
காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலை கட்டுக்குள் வைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை சார்பில், உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்து கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றினை எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்தது. உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின் உடல் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சக்தி அதிகரிக்கும்
காலையில் முட்டை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள உயர்தர புரதமும், உயர்தர கொழுப்பும் உடலின் சக்தியை நாள் முழுவதும் தக்க வைக்கிறது. இதனால் அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. முட்டையில் உள்ள தேவையான அமினோ அமிலங்கள் உடலிற்கு நன்மை செய்கிறது.
நிறைவான நன்மை
விலை அதிகமான மாமிச உணவுகள் உண்பதனால் கிடைக்கும் புரதத்தை விட மிகக்குறைந்த விலையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இது பட்ஜெட்டிற்கு ஏற்ற உணவாகும். முட்டை சாப்பிடுவதனால் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்காது. எனவே இதயநோய் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.
நினைவுத் திறன் அதிகரிக்கும்
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இது நினைவுத்திறனை அதிகரிப்பதோடு எப்பவும் விழிப்புணர்வோடு இருக்க உதவுகிறது.
கண் ஒளியை பாதுகாக்கும்
முட்டையில் உள்ள ஆண்டிஆக்ஸிடென்கள் கண்களை பாதுகாக்க உதவுகிறது. இது சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் கண் பார்வையை பாதிக்காமல் தடுக்கின்றன. வயதான காலத்தில் காட்ராக்ட் ஏற்படுவதை தடுக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்று 'சிக்'கென்ற உடல் வேண்டுமா?
» காலை உணவில் முட்டை சேர்த்தால் உடல் எடை குறையுமா?
» ஸ்லிம் உடம்புக்கு தினமும் ஒரு முட்டை
» காலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவந்தால் உடலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்
» உணவில் தினமும் நெய் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum