தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பைரவர் வழிபாட்டுக்கு உகந்த டிசம்பர் 6-ந் தேதி கார்த்திகை தேய்பிறை அஷ்டமி

Go down

பைரவர் வழிபாட்டுக்கு உகந்த டிசம்பர் 6-ந் தேதி கார்த்திகை தேய்பிறை அஷ்டமி Empty பைரவர் வழிபாட்டுக்கு உகந்த டிசம்பர் 6-ந் தேதி கார்த்திகை தேய்பிறை அஷ்டமி

Post  amma Sun Jan 13, 2013 1:40 pm


பைரவர் வழிபாட்டுக்கு உகந்த டிசம்பர் 6-ந் தேதி கார்த்திகை தேய்பிறை அஷ்டமி
Chennai வியாழக்கிழமை, நவம்பர் 29, 1:36 PM IST
Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி
பைரவர் வழிபாட்டுக்கு உகந்த டிசம்பர் 6-ந் தேதி கார்த்திகை தேய்பிறை அஷ்டமி

அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி கார்த்திகை தேய்பிறை அஷ்டமியாகும். ஸ்ரீமகா பைரவர் வழிபாட்டுக்கு இந்த நாள் மிக, மிக உகந்த நாளாகும். திருவடி சூலம் ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயத்தில் அன்று தேய்பிறை அஷ்டமி பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆலயம் கட்டப்பட்ட பிறகு நடத்தப்படும் முதல் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி பூஜை இதுதான். அன்றைய தினம் பைரவர் மீது சூரிய ஒளிபடும் அற்புதத்தை பக்தர்கள் இங்கு கண்டுகளிக்கலாம். அதற்கு ஏற்ற வகையில், ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

6-ந் தேதி பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பைரவர் மீது சூரிய ஒளி பூஜை நடைபெறும். ஆலயத்தில் உள்ள அஸ்தான ஜன்னல் வழியாக சூரிய ஒளிக்கதிர்கள் வரும். அஸ்தமனம்தான் பைரவத்துக்கு முக்கியம்.

இதன் மூலம் அஸ்தமனத்தில் பிரகாசம் ஏற்படும் தத்துவம் இங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இந்த சூரிய ஒளி பூஜையை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum