அசிடிட்டி பிரச்சினையா? என்ன சாப்பிடலாம்? இதப்படிங்க !
Page 1 of 1
அசிடிட்டி பிரச்சினையா? என்ன சாப்பிடலாம்? இதப்படிங்க !
Acidity
சிலருக்கு சாப்பிட்ட உடனே தொண்டையில புளிச்ச ஏப்பம் வரும். ஜீரணமே ஆகாது நெஞ்செல்லாம் எரியும். இதற்கு காரணம் அசிடிட்டிதான். 'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது இவற்றை தவிர்க்க சில உணவுகளை பரிந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள்.
ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது கட்டுப்படும். அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் ஆப்பிள் ஜூஸ் பருகலாம்.
காய்கறிகளில் முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டானி போன்றவை வேகவைத்து சாப்பிடலாம். இவை ஆரோக்கியத்தோடு அசிடிட்டி பிரச்சினைகளை தீர்க்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். உருளைக்கிழங்கு வேண்டுமானால் சாப்பிடலாம் ஆனால் அவற்றை எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது.
வயிற்றில் அமிலத் தொந்தரவு இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக்கரு, சிக்கன், மீன் போன்றவைகளை உட்கொள்ளலாம், ஆனால் அவற்றை மசாலா அதிகம் சேர்க்காமல் வேகவைத்து உண்ணவேண்டும்.
ஹெவியான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே உணவு ஜீரணமாவதில் சிக்கல் ஏற்படும். எனவே கொழுப்பு குறைவான சீஸ், பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் மைதா தவிர்த்து தானியங்களில் செய்த உணவுகளை தாராளமாக உண்ணலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அசிடிட்டிக்கு என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?
» இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» முதல் மூன்று மாதத்தில் என்ன சாப்பிடலாம்
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
» இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» முதல் மூன்று மாதத்தில் என்ன சாப்பிடலாம்
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum