முதல் மூன்று மாதத்தில் என்ன சாப்பிடலாம்
Page 1 of 1
முதல் மூன்று மாதத்தில் என்ன சாப்பிடலாம்
இரும்புச்சத்து குறைந்தால், பசி இருக்காது. இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம், மாதுளை, கேழ்வரகு, பெருநெல்லி, தக்காளி, எலுமிச்சை, முருங்கைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். நறுக்கும்போது கைகளில் கறையை உண்டாக்கும் கத்தரிக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, கருணைக்கிழங்கு போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளதாகக் கருதப்படுவதால், அவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்காக முதல் மூன்று மாதத்தில் என்ன சாப்பிடலாம் என சில டிப்ஸ்
கேழ்வரகு பக்கோடா
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு – 100 கிராம்,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 2,
முருங்கைக் கீரை – 50 கிராம்,
சூரியகாந்தி எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, மாவை சின்ன துண்டுகளாக உதிர்த்து, பொரித்தெடுக்கவும்.கேழ்வரகில் இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து எல்லாம் இருக்கின்றன. மலச்சிக்கல் வராமலும் காக்கும். மாலை நேரத்தில் வாரம் 2 முறை சாப்பிடலாம்.
இஞ்சித் தேன்
என்னென்ன தேவை?
இஞ்சி – 150 கிராம்,
தேன் – 150 மி.லி.,
ஏலக்காய் தூள் மற்றும்
கிராம்புத் தூள் – தலா 5 கிராம்.
எப்படிச் செய்வது?
இஞ்சியைத் தோல் சீவி, தண்ணீர் விடாமல் இடித்துச் சாறு எடுத்து, ஒரு சிறிய கிண்ணத்தில் அசையாமல் வைக்கவும். 10 நிமிடம் கழித்து, கீழே மாப்படிவு படிந்திருக்கும். மேலே தெளிந்த சாறு இருக்கும். அதனைச் சாய்த்து எடுத்துத் தேன் சேர்த்து, அடுப்பில் வைத்து, பாகு பதம் வரும் வரை கிளறி, ஏலக்காய் தூள், கிராம்புத் தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி, பாத்திரத்தில் மூடி வைக்கவும். இதை தினம் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து உண்டு வந்தால், நெஞ்செரிச்சல், மசக்கை குணமாகும்.
கத்தரிக்காய் சட்னி
என்னென்ன தேவை?
கத்தரிக்காய் – 4,
தக்காளி – 2,
சின்ன வெங்காயம் – 1 கைப்பிடி,
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் – சிறிது,
மிளகுத் தூள் – சிறிது,
கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப,
எண்ணெய் – சிறிது.
எப்படிச் செய்வது?
கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி, மிக்சியில் அரைத்து, எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கடைசியில் சிறிது மிளகுத் தூள் தூவவும் (ஒவ்வாமை ஏற்படாமலிருக்கும்). கத்தரிக்காய், தக்காளி இரண்டிலும் இரும்புச்சத்து அதிகமிருப்பதால், ரத்த சோகையைத் தடுக்கும். வாரம் இருமுறை சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அசிடிட்டிக்கு என்ன சாப்பிடலாம்? என்ன சாப்பிடக்கூடாது?
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
» இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
» அசிடிட்டி பிரச்சினையா? என்ன சாப்பிடலாம்? இதப்படிங்க !
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
» இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
» டென்ஷனில் இருந்து விடுதலை பெற என்ன சாப்பிடலாம்!
» அசிடிட்டி பிரச்சினையா? என்ன சாப்பிடலாம்? இதப்படிங்க !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum