தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!
Page 1 of 1
தொண்டை வலி இருக்கா சூடா சூப் குடிங்க!
Sore Throat
ஜலதோஷம் பிடித்தாலே தொண்டை கரகரப்பா இருந்தாலோ, உடல் வலி அதிகரித்துவிடும். என்ன செய்தால் இதை செய்யலாம் என்று யோசித்தால் தலைவலிதான் அதிகமாகும். மருத்துவரிடம் செல்வதை விட அம்மா வைத்துக்கொடுக்கும் கசாயம் சில சமயம் நிவாரணம் தரும். மிளகு சேர்த்த காரமான சூப் குடித்தால் தொண்டை வலி சட்டென கேட்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
ஜலதோசம் அதிகமாகி மூக்கடைப்பு, தொண்டைவலி ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியா தொற்றுதான். ஸ்ட்ப்ரோ காக்கஸ் எனப்படும் பாக்டீரியாக்கள் புகை பிடிப்பதனாலும், அலர்ஜி, இரவில் உலர்ந்த காற்று வாய் வழியே உட்புகுதல், வாய் வழி சுவாசம், அதிகமாக கத்தி பேசுதல், கத்தி பாடுதல், உலர் இருமல் போன்றவைகளினால் தொண்டையில் தொற்றுகின்றன. உணவு அலர்ஜியினாலும் சில சமயம் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது.
தொண்டை வலியை சரி செய்ய மருத்துவரிடம் சென்றால் அவர் தரும் ஆன்டிபயாடிக் மருந்துகளினால் நிவாரணம் கிடைக்கும். அதேசமயம் வீட்டு மருத்துவ முறையிலும் தொண்டை வலியை குணப்படுத்தலாம்.
உடம்பில் தண்ணீர் சத்து குறைந்தாலும் மூக்கு, தொண்டைப் பிரச்சினைகள் ஏற்படும். எனவே அதிக திரவ சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்கலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் சி, ஏ மற்றும் பி உள்ள பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை வைரஸ் மற்றும் பாக்டிரியாக்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. கீரைகள், கேரட், தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதை வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும். தொண்டை வலியை குணப்படுத்த ஜூஸ் குடிக்கலாம். மேலும் மிளகு சேர்க்கப்பட்ட சிக்கன் சூப் மற்றும் காய்கறி சூப் அருந்துவதும் நல்லது இதனால் உடலில் நீரின் அளவு பராமரிக்கப்படும். மேலும் தொண்டை, மூச்சுப் பாதை சுத்தமாக இருக்கும்..
தொண்டை வலி உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகள், மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதுபோல காஃபின் உள்ள உணவுகள், அதிக இனிப்புள்ள பதார்த்தங்களையும் தவிர்த்து விட வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களையும் விட்டு விடுவது நல்லது. எதிலும் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூடா குடிங்க! ஜலதோஷம் போயே போச்சு!!
» ரொம்ப சூடா குடிக்கிறீங்களா?..தொண்டை புற்றுநோய் வரும்: எச்சரிக்கை ரிப்போர்ட்
» தண்ணீர் அதிகம் குடிங்க...
» தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப் குடிங்க
» நீரிழிவு நோயாளிகளுக்கு காய்ச்சலா? காய்கறி சூப் குடிங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum