18 August 2012
Page 1 of 1
18 August 2012
புலிப்பாணி ஜால வித்தைகள். போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல்தான் புலிப்பாணி ஜாலம்325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்... "பாடினேன் அக்கினியு மில்லாமற் றான் பண்பான அன்னமது சமைக்கக் கேளு ஆடினேன் கானகத்தில் வேண துண்டு அடைவாக சதுர கள்ளி பாற் கரந்து சாடி நீ பாண்டத்தி லரிசி போட்டு சரியாக பால்தன்னை சுருக்காய் வாரு நாடிப்பார் சோறதுவும் வெந்திருக்கும் நலமாக ஜாலம்போல் லாடிப் பாரே" - புலிப்பாணி ஜாலம் 325 - ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் காட்டிலிருந்து கறந்தெடுத்து வந்த சதுரக் கள்ளியின் பாலை விட்டு கால் நாழிகை மூடி வைதிருந்து திறந்து பார்க்க சாதம் நன்றாக வெந்திருக்கும்.. ஆனால் அந்த சாதத்தை யாரும் புசித்தலாகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான..... "பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன் பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீ காரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கி கடிதாக வாயில் போட்டு மென்று துப்பி சாரப்பா அவை தனிலே பந்தத்தை சுற்றி சரியாக கொளுத்தி அவையோருக்கு காட்டி நேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்று நிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே" கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்ந்து விட்டு மக்கள் கூடிய அவையில் போய் நின்று, பந்தத்தைக் கொளுத்தி அவையோருக்குக் காட்டி "எக்ஷினி நீ என்பக்கம் வந்து நில்லடி"என்று சொல்லி பந்தத்தை வாய்க்குள் வைத்து மூடி திறந்து காட்டலாம் ஒன்றும் ஆகாது. புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 141 வது பாடலான..... "உண்ணவே இன்னுமொரு ஜாலங் கேளு இங்குரைப்பேன் விண்ணோரும் வெருண்டு நிக்க என்னவே இரங்கழிச்சில் விதை வாங்கி அதை குழித்தைலம் வாங்கிக் கொண்டு துன்னவே தைலமதை கையிற் தேய்த்து துலக்கமாதாம் தென்னைமரம் தன்னை நோக்கி கன்னவே மரத்தடியில் கைதால் குத்த கங்குமற்று காயதுவும் விழுகும் பாரே" உலகத்தோர் வியக்கும் ஜாலம் சொல்கிறேன் கேள்! , இரங்கழிச்சில் விதையை எடுத்துக் அதில் குழித்தைலம் செய்து, அத் தைலத்தை கொஞ்சமாய் எடுத்து, கையில் தேய்த்துக் கொண்டு காய்கள் காய்த்திருக்கும் தென்னை மரத்தில் ஒரு குத்து குத்த ஒருகாய் மரத்திலிருந்து விழுமாம். புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 163 வது பாடலான..... "எமனுட அக்கினியை மதியா வித்தை இயம்புகிறேன் எல்லோரும் ஆச்சரிக்க நாமனவே சனகனிட புதரு தன்னில் நலமாக பூத்திருக்கும் காளான் தன்னை சொமனவே கொண்டுவந்து புது பாண்டத்தில் சுருக்குடனே போட்டு நீ கதிரில் வைக்க ஆமனவே தைலமாதா உருகும் பாரே அதையெடுத்து பூசி தீயில் குதி" எல்லோரும் ஆச்சர்ய பட தக்கவிதமாக நெருப்பு சுடாமளிருக்கும் வித்தையைக் கூறுகிறேன் கேள், சங்கன் செடியின் புதர்களில் பூத்திருக்கும் காளானைக் கொண்டுவந்து புது மண் பாண்டத்தில் போட்டு சூரிய ஒளியில் வைக்க உருகி வரும் அதை உடம்பில் பூசிக் கொண்டு எவ்வளவு தீயில் வேண்டுமானாலும் குதிக்கலாம் சுடாது என்கிறார் புலிப்பாணி சித்தர். மணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்... புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 273 வது பாடலான..... "பாடினேன் இன்னுமொரு ஜால வித்தை பண்பான பேர்விளங்க சொல்வேன் கேளு நாடியே நத்தை சூரி வேரைக் கண்டு நவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டு கூடியே கூச்சமென திருந்திடாமல் குணமான கண்ணதனில் மணலைப் போட்டு ஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்க அன்பான கண்ணும் அருகாது பாரே" நத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் மென்று தாடையில் அதக்கிக் கொண்டு, இரு கண்ணிலும் மணலைப் போட்டுக் கொண்டு கையால் தேய்த்தால் கண்களுக்கு எதுவும் ஆகாது என்கிறார் புலிப்பாணி சித்தர். இத்துடன், இந்த நூலில் நத்தை வேரைக் கொண்டு செய்யும் வேறு சில ஜாலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர பச்சை பாம்பு ஜாலம், மாடன் மந்திரம், இந்திர ஜாலம், எக்ஷனி ஜாலம், வாத்தியஜாலம் போன்ற சில ஜால முறைகளையும், சில யந்திர ஜாலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum