திருவாதிரை நட்சத்திரம்
Page 1 of 1
திருவாதிரை நட்சத்திரம்
ஒவ்வொரு தமிழ்மாதமும் அதிகபட்சமாக இரு முறை சுவாதி நட்சத்திரம் தலா ஒரு நாள் வரை நிற்கும்.அப்படி நிற்கும் நாளன்று,தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால்,நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லாதவர்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். இதே சுவாதி நட்சத்திரத்தன்று,திருவாலங்காட்டுக்குச் சென்று சிவபெருமானை வழிபட்டால்,களத்திரதோஷம்,புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும். திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்களில்,சிவபெருமானை வணங்கி,மருத்துவ சிகிச்சையை துவக்கினால்,எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமாகும். இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில்,பாம்புக்கடி,விஷக்கடிக்குரிய மந்திரங்களை அதிகமான எண்ணிக்கையில் ஜபித்தால்,எளிதில் சித்தி பெறலாம். உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பேய் பிசாசு தொல்லைகள் இருக்குமானால்,நீங்கள் திருநாகேஸ்வரம் அல்லது சிதம்பரம் அல்லது திருவாலங்காடுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,பேய் பிசாசுத்தொல்லைகள் நீங்கும். சதயம் நட்சத்திரம் நிற்கும் நாட்களில் சிவாலயங்களில் இருக்கும் காலபைரவருக்கு மண்விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி வழிபட, மூட்டுவலி,கைகால் வலிகள் நீங்கும்.மாந்திரீகப்பாதிப்பும் நீங்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அக்னி நட்சத்திரம் துவங்கும் முன் சூர்யாவின் துருவ நட்சத்திரம் துவக்கம்
» திருவாதிரை களி
» திருவாதிரை நோன்பு
» திருவாதிரை விரதம்
» திருவாதிரை நோன்பு
» திருவாதிரை களி
» திருவாதிரை நோன்பு
» திருவாதிரை விரதம்
» திருவாதிரை நோன்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum