தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆண்டுக்கு ஒரு தடவை ஆலயத்துக்கு வாருங்கள்

Go down

ஆண்டுக்கு ஒரு தடவை ஆலயத்துக்கு வாருங்கள் Empty ஆண்டுக்கு ஒரு தடவை ஆலயத்துக்கு வாருங்கள்

Post  amma Sun Jan 13, 2013 1:30 pm



திருவடி சூலம் மகா பைரவர் ருத்ர ஆலயத்துக்கு சென்று வர நேரம், காலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எப்போது நினைத்தாலும் சென்று வரலாம். பைரவருக்கு அதை செய்ய வேண்டுமே, இதை செய்ய வேண்டுமே என்று பக்தர்கள் தயங்க வேண்டியதில்லை. ஒரு முழம் பூ வாங்கிப் போட்டு வணங்கினால் கூட பைரவர் மகிழ்ச்சி அடைவார்.

அதுகூட முடியவில்லையாப பரவாயில்லை. நீங்கள் ஒருதடவை அந்த தலத்தில் கால் வைத்து விட்டு வந்தால் கூட போதும், பைரவரின் அருள் உங்களுக்கு நிச்சயம் முழுமையாக கிடைக்கும். இயல்பான நிலையில் இறைவனை வழிபட வேண்டும் என்பது ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகளின் கருத்தாகும்.

இந்த தலத்து பைரவரிடம் நீங்கள் ஒருதடவை மனதை கொடுத்து விட்டால் போதும், பிறகு நீங்கள் விரும்பி அழைக்கும் போதெல்லாம் அவர் உங்களுக்கு அருள் செய்வார். ஆனால் அதற்கு எப்போதும் பொறுமை வேண்டும். உங்களுக்கு வேண்டிய பலனை வேண்டிய நேரத்தில் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் தருவார்.

எனவே உங்களுக்கு தேவையானது நிச்சயம் கிடைககும். அது எப்படி பைரவர் தருவார் என்ற சந்தேகம் உங்களுக்கு எள் அளவும் வரவேண்டிய தேவை இல்லை. நிலையான பூமியில், மனம் நிலை இல்லாதவர்கள்தான் ஆட்டம் போடுவார்கள். மனம் பக்குவப்பட்டு விட்டால் பைரவம் உங்களுக்குள்ளும் வந்துவிடும்.

பிறகு தானாக நீங்கள் திருவடிசூலத்துக்கு சென்று விடுவீர்கள். மற்ற தலங்களைப் போல வாரம் தோறும் குறிப்பிட்ட கிழமைகளில் வரவேண்டும். மாத பூஜைகளில் பங்கேற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் மகா பைரவர் ருத்ர ஆலயத்தில் இல்லவே இல்லை. இது தமிழ்நாட்டில் நீங்கள் எந்த ஆலயத்திலும் காண முடியாத தத்துவமாகும். உங்களுக்கு எப்போது வசதிப்படுகிறதோ...

அப்போது வாருங்கள். நீங்கள் எப்போது நினைக்கிறீர்களோ அப்போ செல்லுங்கள். இதுபற்றி ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள் என்ன சொல்கிறார் தெரியுமா? இந்த பூமியில் காலடி எடுத்து வைத்து, தங்கள் ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று யார், யார் விரும்புகிறார்களோ, அவர்கள் நிச்சயம் வருவார்கள்.

இத்தகையவர்கள் அடிக்கடி வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்டுக்கு ஒரு தடவை வந்தால் போதும் என்கிறார். ஆண்டுக்கு ஒரு தடவை வந்தாலே கிடைக்க வேண்டிய முழு பலனும் கிடைத்து விடும் என்பது இந்த தலத்துக்கே உரிய தனித்துவமாகும். பேயானாலும் சரி... நோயானாலும் சரி... என்னை நம்பிக்கையுடன் தட்டி எழுப்பலாம். நிச்சயம் உதவி செய்வேன் என்கிறார் ஸ்ரீபைரவ சித்தாந்தம் சுவாமிகள்.

மகா பைரவரை நீங்கள் நெருங்க, நெருங்க, உங்கள் கர்ம வினைகள் காணாமல் போய்விடும். உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் விமோசனம் கிடைக்கும். ஸ்ரீமகா பைரவர் 12 ராசிகளையும் தன் அங்கமாக கொண்டவர். எனவே ராசிப்படி ஏற்பட்ட கர்மங்கள் தொலைந்து போகும். திருவடி சூலம் ஸ்ரீமகாபைரவ ருத்ர ஆலயத்தில் ஒருதடவை காலடி எடுத்து வைத்தால் நீங்கள் அதை உணர்வீர்கள்.

ஆலய பெயர் விளக்கம்.....

சென்னை-செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மகேந்திரா சிட்டி நுழை வாயிலில் இருந்து உள்ளே சென்றால் திருவடி சூலம் அடையலாம். இங்குள்ள ஆலயத்துக்கு ஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பொருள் என்ன தெரியுமா? ஸ்ரீஎன்பது பெண் சத்தியை குறிக்கும். மகா என்றால் பெரியது என்று பொருள். பைரவ என்றால் பயம் அறியாதவர் என்று அர்த்தம்.

ருத்ர என்பது சிவ வம்சத்தையும், ஆலயம் என்பது ஆகம விதிகளின்படி உருவாக்கப்பட்டதலம் என்பதையும் குறிக்கும். மொத்தத்தில் பயம் அறியாத சக்தியுடன் கூடிய சிவ வம்சத்து ஆகம விதிப்படி அமைந்த ஆலயம் என்று பொருளாகும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum