நீரிழிவு நோயுள்ள மனைவியா? சத்தான உணவு கொடுங்கள் !
Page 1 of 1
நீரிழிவு நோயுள்ள மனைவியா? சத்தான உணவு கொடுங்கள் !
Healthy Snacks for diabetics Women
பெரும்பாலான பெண்களுக்கு திருமணத்திற்கு பின்னர் அதுவும் குழந்தை பேற்றுக்குப் பின்னரே நீரிழிவு நோய் தாக்குகிறது. இதற்கு காரணம் கருத்தரித்த பின் பெண்களின் உடல் எடை அதிகரிப்பதாலும், கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும், பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருசிலருக்கு குழந்தை பிறந்த பின்னர் நீரிழிவு நோய் பாதிப்பு இல்லாமல் போக வாய்ப்புள்ளது.
ஒரு சில பெண்மணிகள், கணவர், குழந்தைகள் என அவர்கள் மேல் அதீத கவனம் செலுத்தி தங்களின் உடல்மேல் கவனம் செலுத்தாமல் விடுகின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்படுவதோடு போனஸாக நீரிழிவு, இதயநோய் போன்றவை தோன்றுகின்றன. எனவே நம்முடைய நலனின் அக்கறை கொள்ளும் இல்லத்தரசியின் மேல் அக்கறை எடுத்துக்கொள்வதோடு, அவர்களுக்குத் தேவையான சத்தான ஆகாரங்களை உண்ண அறிவுறுத்தவேண்டும்.
பழ சாலட்கள்
பழங்கள் இயற்கையிலேயே குறைந்த அளவு சர்க்கரையை கொண்டவை. குறிப்பாக ஆப்பிள், பெர்ரீ பழங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் சீஸ் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அதில் உள்ள கால்சியம் சத்து பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான நோய்களில் இருந்து பாதுகாக்கும். இதன் மூலம் பற்களும், எலும்புகளும் பலமடையும்.
பாப்கார்ன்
வீடுகளில் தொலைக்காட்சி பார்க்கும் போது கண்ட நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதால் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க வீட்டிலேயே கொழுப்புச் சத்து குறைந்த பாப்கார்ன் தயாரித்து கொடுக்கலாம். இது சத்தானதாக இருப்பதோடு உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்து ஏற்படுவதை தடுக்கும்.
தானிய ரொட்டிகள்
பேக்கரிகளில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே ராகி, கம்பு, சோளம் ஆகிய தானியங்களால் ஆன மாவுகளில் ரொட்டிகளை தயார் செய்து கொடுக்கலாம். இது சுவையானதோடு, சத்தான ஆகாரமாகும்.
காய்கறி சாலட்
தினசரி உணவுகளில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தவேண்டும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைவெளி உள்ள நேரத்தில் காரட், செலரி, புருக்கோலி, போன்ற காய்கறி கட் செய்து அவர்களுக்கு சாப்பிட சொல்லி அறிவுறுத்தலாம். கொழுப்பு நீக்கப்பட்ட தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு அதன் மீது மிளகு பொடி தூவி அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஏற்ப ப்ரிட்ஜில் வைக்கலாம்.
மேலும் நீரிழிவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளையும், அதற்கேற்ப உடற்பயிற்சியையும், மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் அவர்களின் நீரிழிவு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம். அலுவலகம் சென்றாலும் அவ்வப்போது தொலைபேசி வழியாக விசாரித்து குறிப்பிட்ட உணவுகளை உண்ணுமாறு அறிவுறுத்தலாம். இதனால் வீட்டில் கணவரையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் மனதளவில் மகிழ்ச்சிப்படுத்துவதோடு, அவர்களின் உடலும் விரைவில் குணமடையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று உணவு வகைகள்
» சத்தான உணவு கருப்பை கோளாறை தடுக்கும்
» நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று உணவு வகைகள்
» நீரிழிவு காரர்களுக்கான உணவு
» நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை
» சத்தான உணவு கருப்பை கோளாறை தடுக்கும்
» நீரிழிவு நோயாளிகளுக்கு மாற்று உணவு வகைகள்
» நீரிழிவு காரர்களுக்கான உணவு
» நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum