தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முக்திப்பேறு பட்டம் பெறும் முதல் தமிழர் தேவசகாயம் பிள்ளை: போப் பிரதிநிதி தலைமையில் நாளை விழா

Go down

முக்திப்பேறு பட்டம் பெறும் முதல் தமிழர் தேவசகாயம் பிள்ளை: போப் பிரதிநிதி தலைமையில் நாளை விழா Empty முக்திப்பேறு பட்டம் பெறும் முதல் தமிழர் தேவசகாயம் பிள்ளை: போப் பிரதிநிதி தலைமையில் நாளை விழா

Post  amma Sun Jan 13, 2013 1:00 pm

தமிழகத்தில் பிறந்த மறைசாட்சி தேவ சகாயம் பிள்ளைக்கு நாளை முக்திப்பேறு (அருளாளர்) பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கு முன், அன்னை தெரசா உட்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த அல்போன்சா புனிதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க குருக்கள் அல்லது துறவிகளாக வாழ்ந்தவர்கள்.

ஆனால், ஒரு சாதாரண பொதுநிலை கிறிஸ்தவராக வாழ்ந்து இயேசுவுக்கு சான்றுபகர்ந்த தமிழர் ஒருவர் தற்போது அருளாளர் பட்டம் பெறுகிறார். அந்த புகழுக்குரிய தேவ சகாயம் பிள்ளையின் வரலாற்றை இங்கு காண்போம். 1712 ஏப்ரல் 23ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தில் நாயர் குலத்தில் நீலகண்ட பிள்ளை பிறந்தார்.

உயர்ந்த சமூகத்தவராகிய இவர், போர் கலைகள் கற்றுத் தேர்ந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியில் சேர்ந்தார். மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் நன்மதிப்பை பெற்றதால், அரசவையின் கருவூல அதிகாரியாக உயர்த்தப்பட்டார். அக்காலத்தில், இந்தியாவின் பகுதிகளைப் பிடிக்க வந்த டச்சுக்காரர்களுக்கும் திருவிதாங்கூர் படைகளுக்கும் இடையில் குளச்சல் பகுதியில் போர் நடைபெற்றது.

போரில் வெற்றிபெற்ற மன்னர் மார்த்தாண்ட வர்மா, டச்சு வீரர்கள் பலரை சிறைபிடித்தார். அவர்களுள் கத்தோலிக்க கிறிஸ்தவரான டச்சு தளபதி டிலனாய் என்பவரும் ஒருவர். பின்னாளில் இவர், மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு நெருக்கமாகி பல புதிய போர் கருவிகளை திருவிதாங்கூர் படைகளுக்கு அறிமுகம் செய்தார்.

அதே நேரத்தில், அரசவையில் பணியாற்றிய நீலகண்ட பிள்ளைக்கும் டிலனாய்க்கும் இடையே நட்பு மலர்ந்தது. நீலகண்ட பிள்ளை அடிக்கடி சோகமாக இருப்பதை கண்டடிலனாய், அதற்கான காரணத்தைக் கேட்டார். தனது குடும்பத்தில் தொடர்ந்து பொருள் சேதமும், கால்நடைகளின் உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதாக நீலகண்டன் பதிலளித்தார்.

இதைக் கேட்ட டிலனாய், பைபிளில் வரும் யோபுவின் கதையைக் கூறி, ஒரு மடங்கு ஏற்படும் இழப்புக்கு கடவுள் பல மடங்காக திருப்பித் தர வல்லவர் என்று எடுத்துரைத்தார். அதைக் கேட்டது முதல், நீலகண்டனுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. டிலனாய் வழியாக இயேசுவைப் பற்றியும், கிறிஸ்தவத்தைப் பற்றியும் அதிகமாக தெரிந்து கொண்டார்.

1745 மே 14ந்தேதி, நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் ஆலயத்தில் அருட்தந்தை புத்தாரியிடம் நீலகண்டன் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். அப்போது அவருக்கு `தேவசகாயம்' என்ற பெயர் வழங்கப்பட்டது. அக்காலத்தில், உயர்ந்த சாதியில் பிறந்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறக்கூடாது என்று மன்னர் மார்த்தாண்ட வர்மா கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதனால், தேவசகாயம் மதம் மாறியதற்கு அரசவையில் எதிர்ப்பு கிளம்பியது. உடன் பணியாளர்கள் இவரைத் தீண்டத்தகாதவராக ஒதுக்கினார்கள். ஆனால் தேவசகாயம், கடவுளின் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற எண்ணத்துடன் தாழ்ந்த சாதியினருடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். உயர் குல சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டவர்களோடு இணைந்து உணவு உண்டார்.

அவரது இந்த மாற்றம், அரசவையில் ஒரு பெரிய விவாதத்துக்கு வழி வகுத்தது. தேவசகாயம் மீண்டும் நீலகண்டனாக மாற வேண்டுமென மன்னர் கோரிக்கை விடுத்தார். ஆனால், இயேசுவோடு இணைந்த புதிய வாழ்வைக் கைவிட தேவசகாயம் தயாராக இல்லை. அப்பகுதி கிறிஸ்தவர்களுக்காக மன்னரிடம் பரிந்து பேசுபவராக திகழ்ந்தார்.

மக்கள் அவரை தேவசகாயம் பிள்ளை என்று மரியாதையோடு அழைத்தார்கள். அரசவையில் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே, தேவசகாகயத்தை கைது செய்ய மன்னர் உத்தரவிட்டார். கிறிஸ்தவ மதத்தில் சேரக்கூடாது என்ற பயம் உருவாகும் அளவுக்கு தேவசகாயம் பிள்ளைக்கு தண்டனை வழங்க வேண்டுமென அரசவையில் இருந்தவர்கள் மன்னரை வற்புறுத்தினர்.

தேவசகாயம் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தப்பட்டு எருமை மாட்டின் மீது ஊர் ஊராக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டார். புலியூர் குறிச்சியில் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காததால், அருகிலிருந்த பாறையில் இவர் முழங்கையால் இடித்ததும் அங்கு ஒரு நீரூற்று தோன்றியது. பெருவிளை என்ற இடத்தில் இருந்த பட்டுப்போன ஒரு வேப்பமரத்தில் இவரை பல மாதங்கள் கட்டி வைத்தார்கள்.

அது துளிர்த்து அவருக்கு நிழல் தரும் அளவுக்கு பெரிய கிளைகளை விரித்தது. மக்கள் பலரும் இவரை அந்த இடத்தில் வந்து சந்தித்து அவரிடம் ஆசி பெற்றுச் சென்றார்கள். அதன் மூலம் பலருக்கும் அற்புதங்கள் நடைபெற்றன. அதன் பிறகு, மக்கள் செல்ல முடியாத ஆரல்வாய்மொழி காட்டுப் பகுதியில் அமைந்திருந்த இருண்ட சிறையில் தேவசகாயம் அடைக்கப்பட்டார்.

இவரை சாட்டையால் அடித்து, ரத்தக் காயங்களில் மிளகாய்த்தூளை பூசினார்கள். இவ்வாறு மூன்றரை ஆண்டுகள் வேதனை அனுபவித்தாலும், தேவசகாயம் இயேசுவின் மீதான விசுவாசத்தைக் கைவிடவில்லை. இதனால், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல மன்னர் மார்த்தாண்ட வர்மா உத்தரவிட்டார். 1752 ஜனவரி 14ந்தேதி, ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் தேவசகாயம் பிள்ளை சுட்டுக் கொல்லப்பட்டார்.

சில நாட்களுக்கு பின் இது பற்றி தகவல் அறிந்த கிறிஸ்தவர்கள், இவரது உடல் பாகங்களை சேகரித்து கோட்டாறில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் அடக்கம் செய்தனர். அப்போது கொச்சி ஆயராக இருந்த கிளமென்ட்ஸ் ஜோஸ், நமக்கு ஒரு மறைசாட்சி கிடைத்திருக்கிறார் என்று போப் ஆண்டவருக்கு தகவல் அனுப்பினார்.

மூன்று நூற்றாண்டுகளாக, மக்கள் மனதில் மாண்புமிகு மறைசாட்சியாக திகழ்ந்த தேவசகாயம் பிள் ளைக்குபுனிதர் பட்டம் வழங்கும் நடவடிக்கைகள் கோட்டாறு மறை மாவட்டத்தால் அண்மையில் தொடங்கப்பட்டன. இதன் விளைவாக, 2004ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப்பீடம் இவரை `இறை ஊழியர்' என்று அங்கீகரித்தது. இந்த ஆண்டு ஜுன் 28ந்தேதி, இவர் வணக்கத்துக்குரியவராக உயர்த்தப்பட்டார்.

அப்போது இவரை முக்திப்பேறு பெற்றவராக (அருளாளராக) அறிவிக்க அனுமதி அளிக்கும் ஆவணங்களில் போப் 16ம் பெனடிக்ட் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, நாளை (டிசம்பர் 2ந்தேதி) நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் போப் ஆண்டவரின் பிரதிநிதி ஆஞ்சலோ அமாத்தோ, தேவசகாயம் பிள்ளையை `அருளாளர்' என்று அறிவிக்கிறார்.

வார்டிகன் தூதர் சல்வதோரே பென்னாக் கியோ, கர்தினால் ஆஸ்வால்ட் கிராசியஸ், கர்தினால் தெலாஸ்பேர் டோப்போ, கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, கர்தினால் மோரான் மோர் பசிலேயஸ் க்ளிமிஸ் கத்தோலிக்கோஸஸ் மற்றும் 45 பிஷப்புகள், 500 குருக்கள், 1,500-க்கும் மேற்பட்ட துறவிகள், 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், அரசு அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். தேவசகாயம் பிள்ளை பெயரால் நடைபெறும் ஒரு அற்புதம் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» முக்திப்பேறு பட்டம் பெறும் முதல் தமிழர் தேவசகாயம் பிள்ளை: போப் பிரதிநிதி தலைமையில் நாளை விழா
» போப் தேர்தல்: முதல் ஓட்டெடுப்பில் முடிவு எட்டப்படவில்லை
» ஆலங்குடி - திட்டை கோவில்களில் நாளை குருப்பெயர்ச்சி விழா
» புதிய போப் தேர்வில் இப்போதைய போப் தலையிடமாட்டார்"
» நாளை மங்களம் தரும் ஆடிப்பெருக்கு விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum