பொலிவான தோற்றத்தைத் தரும் 'தக்காளி ஃபேஸ் பேக்'
Page 1 of 1

முகத்தை அழகுப்படுத்துவதற்காக நாம் நிறைய செலவு செய்திருக்கிறோம். அப்படி அவ்வளவு செலவு செய்து முகத்தை பொலிவாக்க, நம்மிடம் இருக்கும், அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படும் தக்காளியை வைத்து ஈஸியாக ஃபேஸ் பேக் செய்யலாம்.
தக்காளியானது இயற்கையில் எளிதில் கிடைக்கும். இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இதை வைத்து ஃபேஸ் பேக் செய்வதால், சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும். இப்போது அந்த தக்காளியை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்வதென்று பார்ப்போம்!!!
1. தக்காளியை வேக வைத்து தோலை நீக்கி, அதனுடன் சிறிது ஓட்ஸ் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு அதனைக் கழுவ வேண்டும். இப்படி செய்தால் சூரிய ஒளி பட்டுப் பட்டு பழுப்பு நிறமாகிய இடம் பொலிவு பெற்று அழகுடன் காணப்படும்.
2. வேக வைத்த தக்காளியோடு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு முகத்தில் தடவி, காய்ந்ததும் அதனை தண்ணீரால் கழுவி வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.
3. மூல்தாணி மெட்டியுடன் தக்காளிச் சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வேண்டும், இல்லையென்றால் உள்ளங்கையை நினைத்து மாஸ்க் மீது மசாஜ் போல் செய்ய வேண்டும். இப்படி 2-3 நிமிடம் மசாஜ் செய்து பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், முகப்பரு, கருவளையம் போன்றவை போய்விடும்.
4. சந்தனப்பவுடர் கூட ஒரு சிறந்த முகத்தை அழகுப்படுத்த உதவும் அழகுப் பொருள். ஒரு பௌலில் சிறிது தக்காளிச் சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சந்தனப்பவுடர் போட்டு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
5. சாதாரணமாக தக்காளியை வேக வைத்து, அதனை மசித்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கருப்பு நீங்கி முகம் அழகாகக் காணப்படும்.
6. எங்கேனும் அவசரமாக செல்ல வேண்டும் என்றால் அப்போது வேக வைத்த தக்காளியுடன் 2 ஸ்பூன் பாலை விட்டு கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிச் சென்றால், முகமானது பிரகாசமாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி ஃபேஸ் மாஸ்க் பொலிவான சருமத்தை தரும்!!!
» பொலிவான சருமம் வேண்டுமா? காய்கறிகளை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க...
» பூசணிக்காய் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்
» முட்டை ஃபேஸ் பேக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum