தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகுபகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்

Go down

 ராகுபகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்  Empty ராகுபகவானின் ஆட்சிக்கு உட்பட்ட பொறுப்புகள்

Post  amma Sun Jan 13, 2013 12:53 pm

தகப்பன் வழி, சூதாட்டம், விதவையின் தொடர்பு, உடலில் ஏற்படும் வலி, களவு, கபடம், அடிமைத் தொழில், சிறைவாசம், மது, நர்ஸ், செல்வ இழப்பு, அளவுக்கு மீறிய லாபம், நஷ்டம், அளவுக்கு மீறிய துன்பம், துறவரம், புதையல், தையல் கலை, சுவீகார புத்ரன், அëன்னிய மதத்தினரின் தொடர்பு, முத்து எடுத்தல், கள்ளக்கடத்தல், குறுக்கு வழியில் சம்பாதித்தல், வெளிநாட்டில் வேலை, குழந்தைகள் தரும் மகிழ்ச்சி, விஷபயம், வயிற்றில் புண், கர்பம் கலைதல், கெட்ட கனவு, திருமண வாழ்வில் மகிழ்ச்சி, அறிவியல் அறிஞர், கலைஞர், எலக்ட்ரானிக் தொழில், கலாட்டா - குழப்பம், சூதாடுதல், லஞ்சம், திடீர் விபத்து, அரசியல் குழப்பம், ஏமாற்று வேலை, தோல்வியாதி, அயல்நாட்டு மொழிகள் அறிவது, சக்தி வழிபாடு, அனைத்து ரிப்பேர் தொழில்கள், தற்கொலை முயற்சி, விபத்துக்கள், இதயகோளாறு, விஷம்.

ராகு சூரியனது ஆட்சி வீடான சிம்மத்திலும் உச்ச வீடான மேஷத்திலும் சந்திரன் ஆட்சி வீடான கடகத்திலும் உச்ச வீடான ரிஷபத்திலும் இருப்பின் நற்பலன்களே தருவார். சனி பகவானின் வீடான மகர, கும்பங்களிலும் நற்பலன் தருவார்.

ஜாதகம் இல்லாதவர்கள் ராகுதோஷத்தை கண்டுபிடிப்பது எப்படி?

ஒருவர் நல்லவராக இருந்து திடீரென கெட்டபழக்கவழக்கங்களுக்கு ஆளாகுதல், மோசமான குணம், மற்றவர்களை கெடுக்க நினைப்பது, ஏமாற்ற நினைப்பது, பொய் சொல்லுவது, மற்றவர்களுடன் அனுசரித்து செல்லாதது, விதண்டாவாதம் புரிவது, மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக பேசுவது, அழுத்தக்காரராக இருப்பது, எப்போதும் ஏதாவது ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருப்பது, குழப்பமான முடிவெடுப்பது, விஷபூச்சிகளால் பாதிக்கப்படுவது, கணவன்-மனைவிக்குள் ஒன்றுமில்லாத தகராறு ஆகியவை இருந்தால், அவருக்கு ராகு தோஷம் இருப்பதாக கொள்ளலாம்.


ராகு தரும் இன்னல்கள்......

சிறை தண்டனை பெறுதல், ஏமாற்றிப் பிழைக்கும் எத்தன், சித்திரவதைக்கு உள்ளாகுதல், பெரும் விபத்தில் உயிரிழத்தல், ஒழுக்கமில்லாத வாழ்க்கை இவை அனைத்தும் ராகு தரும் கொடுஞ்செயல்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum