தாடிகளில் பொடுகு வருகிறதா? இதை படிச்சு பாருங்க...
Page 1 of 1

How to get rid of beard dandruff
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் அதிக அளவு சூரிய வெப்பத்தின் காரணமாக உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் குறைந்து, உடல் விரைவில் வறட்சியாகி விடுகிறது. இதனால் தலையில் பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுகிறது, இத்தகைய தொல்லை பெண்களுக்கு மட்டும் இல்லை, ஆண்களுக்கும் தான் இருக்கிறது. அதிலும் ஆண்கள் பெரிதும் அவஸ்தைப்படுவது, பொடுகுத் தொல்லைகளாலேயே. அதுமட்டுமல்லாமல் உதடுகளில் வறட்சி, செதில் போன்று தோல் வருதல் மற்றும் தாடிகளில் தலைப் பொடுகு வருவது போன்றவைகளும் ஏற்படுகின்றன. அதனால் அவர்களுக்கு விரைவில் வயது முதிர்ந்த தோற்றமானது ஏற்படுகிறது.
அதிலும் சில ஆண்கள் தலையில் பொடுகிற்கு பயன்படுத்தும் ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை, தாடிகளில் பொடுகு வருகிறது என்று பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்துவதால் சருமம் தான் பாதிக்கப்படும். ஆகவே அப்போது அதனையெல்லாம் பயன்படுத்தாமல், தலையில் வரும் பொடுகு முகத்திற்கு வருவதற்கு காரணமான தலையணை உறை, பெட்சீட் போன்றவற்றை நன்றாக துவைத்து பயன்படுத்த வேண்டும். மேலும் ஒரு சில வீட்டு மருந்துகளையும் பயன்படுத்தினால், அவற்றை வராமல் தடுக்கலாம்.
தாடிகளில் உள்ள பொடுகு போவதற்கு...
* வேப்ப எண்ணெயை தலைக்கு, புருவத்திற்கு, தாடிக்கு தேய்த்து வந்தால் பொடுகு வராமல் இருப்பதோடு, சருமமும் வறட்சி அடையாமல் இருக்கும். ஏனெனில் இவை பொடுகுகளை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழித்துவிடும்.
* எலுமிச்சையும் ஒரு சிறந்த எளிதான மருந்து. அதற்கு எலுமிச்சை சாற்றை பிழிந்து தாடிகளில் தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலை வைத்து தாடிகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம். இதனால் தலைகளில், தாடிகளில், புருவத்தில் வரும் பொடுகளை தவிர்க்கலாம்.
* வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, அந்த பேஸ்டை முகத்திற்கு, கூந்தலுக்கு தடவினால், பொடுகுத் தொல்லை வராமல் இருக்கும்.
* மற்றொரு முறை வீட்டிலேயே பொடுகிற்கான ஷாம்புகளை தயாரிக்கலாம். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் சீகைக்காய், 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி, வேப்பிலைப் பொடி, ஹென்னா மற்றும் தயிர் சேர்த்து, பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் அதனை கூந்தல், தாடி, புருவம் போன்றவற்றில் தடவி, காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசவும்.
* பாகற்காய் பசை, மஞ்சள், கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து, முகத்திற்கு தடவினால், பொடுகு போவதுடன், சருமமும் வறட்சி இல்லாமல் இருக்கும்.
வறண்ட சருமத்திற்கு, சரும வெடிப்புக்காக கடைகளில் விற்கும் சோப்புகளை பயன்படுத்த வேண்டாம். மேலும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூந்தலை அலசினால், தலையில் பொடுகு வருவதைத் தடுக்கலாம். தலைக்கு குளிக்கும் அரை மணி நேரத்திற்கு முன், கூந்தலுக்கு எண்ணெயை தடவி ஊற வைத்து, பின் குளிக்கவும். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தாடிகளில் பொடுகு வருகிறதா? அதை போக்குவதற்கு சில வழிமுறைகள்.
» ஆபிஸில் மீன் வளர்க்க ஆசையா? இத படிச்சு பாருங்க...
» அழகான முதுகு வேண்டுமா? அப்ப இத படிச்சு பாருங்க...
» உதடுக்கு மேல கருப்பா இருக்கா? இதை படிச்சு பாருங்க..:
» மெஹந்தி வெச்சு கலர் பிடிக்கலையா? இத படிச்சு பாருங்க....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum