மென்மையான சருமம் வேண்டுமா? 'ஸ்ட்ராபெர்ரி ஃபேஸ் மாஸ்க்' போடுங்க...
Page 1 of 1

strawberry
ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று தான் பார்த்திருப்போம். ஆனால் அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள் சருமத்தை அழகாக்கவும் பெரிதும் பயன்படுகின்றன. வேண்டுமென்றால் உடலுக்கு தடவும் க்ரீம்கள் அனைத்தையும் பாருங்கள், அதில் அந்த க்ரீமை செய்யப் பயன்படும் பொருட்களில் ஸ்ட்ராபெர்ரியும் ஒன்றாக இருக்கும். ஏனெனில் இந்த பழத்தில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
ஆகவே அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தை பொலிவாக்க, இந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து சருமத்திற்கு ஒருசில ஃபேஸ் மாஸ்க் செய்தால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் மற்ற கிருமிகள் நீங்கி, சருமம் பட்டுப் போன்று இருக்கும். இப்போது இந்த ஸ்ட்ராபெர்ரியை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் செய்யலாம் என்று பார்ப்போமா!!!
ஸ்ட்ராபெர்ரி மற்றும் தேன்: ஸ்ட்ராபெர்ரி போன்ற அழகான நிறத்தில் கன்னத்தை பெறுவதற்கு, 2-3 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், 1 டேபிள் ஸ்பூன் தேனை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் சருமமும் நன்கு அழகாக காணப்படும்.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் எலுமிச்சை: இது மற்றொரு சிறந்த முறை. அதிலும் எலுமிச்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஒரு சூப்பர் காம்பினேஷன். அதற்கு அரை கப் அரைத்த ஸ்ட்ராபெர்ரி பழத்துடன், எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி சுத்தமாக காணப்படும்.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் தயிர்: சருமம் நன்கு இறுக்கத்தோடு, இளமைப் போன்று காணப்படுவதற்கு, 3-4 டேபிள் ஸ்பூன் அரைத்த ஸ்ட்ராபெர்ரியுடன், 1-2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவிட வேண்டும்.
ஸ்ட்ராபெர்ரி: எந்த ஒரு பொருளையும் கலக்காமல், வெறும் ஸ்ட்ராபெர்ரியை வைத்துக் கூட, சருமத்தை பொலிவாக்கலாம். இதற்கு ஸ்ட்ராபெர்ரியை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவ வேண்டும். பின் 15-20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையால், சருமம் களங்கமின்றி சுத்தமாக, அழகாகக் காணப்படும்.
ஸ்ட்ராபெர்ரி மற்றும் கார்ன் ப்ளார்: சருமத்துளையில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்க, அரை கப் அரைத்த ஸ்ட்ராபெர்ரியுடன் 1 டேபிள் ஸ்பூன் கார்ன் ப்ளாரை கலந்து, முகத்திற்கு தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவும் போது, மசாஜ் செய்து கொண்டே கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் நன்கு தெளிவாக, பளிச்சென்று காணப்படும்.
இவ்வாறெல்லாம் செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பொலிவான சருமம் வேண்டுமா? காய்கறிகளை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க...
» பிரகாசமாக முகம் வேண்டுமா? 'வெள்ளரி ஃபேஸ் பேக்' போடுங்க!!!
» பனிகாலத்துல சருமம் பொலிவிழந்து இருக்கா? ஆரஞ்சு ஃபேஸ் பேக் போடுங்க...
» மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்:
» ரோஜாப்பூ நிறம் வேண்டுமா? குங்குமப்பூ ஃபேஸ் பேக் போடுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum