சமயலறை கூட ஒரு அழகு நிலையம் தான்!!!
Page 1 of 1
சமயலறை கூட ஒரு அழகு நிலையம் தான்!!!
Kitchen
இன்றைய நாகரீக வளர்ச்சியில் நாம் மறந்த பல பழைய உண்மையான விஷயங்களில், நமது பழங்காலத்து அழகு ரகசியங்களும் தான். வேண்டுமென்றால் பாருங்கள், நமது வீட்டில் அம்மா, அத்தை, ஏன் பாட்டி கூட நீண்ட நாட்களுக்குப் பின்னரே முதுமையை தொட்டனர். ஆனால் இன்றைய காலத்தில், கெமிக்கல் கலந்த பல அழகு பொருட்களைப் பயன்படுத்துவதால், நமது சருமம் விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. இதற்கு காரணம் இயற்கையை நாடாமல், செயற்கையில் நுழைந்தது தான். ஆகவே நாம் மறந்த பழங்காலத்து அழகு நிலையமான, வீட்டில் இருக்கும் சமையலறையிலேயே பல அழகு சாதனப் பொருட்கள் அடங்கியுள்ளன. அது என்னவென்று அழகியல் நிபுணர்கள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. அதற்கு சமையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியிலேயே மருந்து இருகிறது. மிளகு சிறிது, 1/2 டீஸ்பூன் அரிசியை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு நன்கு மென்மையாக அரைத்து, அதனை பருக்களின் மீது, வைத்து, காய்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மறைந்துவிடும்.
* மூக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளை நீக்க, சமையலில் பயன்படுத்தும் தக்காளியை தோலுடன் அரைத்து, முக்கில் தடவி, காய விடவும். இதனால் அவை தானாக உதிர்ந்துவிடும். பின் மூக்கு பார்க்க மென்மையாக அழகாக இருக்கும்.
* உதடுகள் நிறமிழந்து, அழகிழந்தது போல் தோன்றுகிறதா? அதற்கு சிறிது பீட்ரூட்டை எடுத்து, அதனை அரைத்து, உதடுகளின் மீது தினமும் தடவி வந்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போட்டது போல் காணப்படும்.
* முகத்தில் உள்ள வெயிலினால் ஏற்பட்ட கருமையைப் போக்க, பாலுடன் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி, காய வைத்து, பஞ்சை நீரில் நனைத்து, துடைத்து எடுக்க வேண்டும்.
* அழகைப் பிரதிபதிப்பதில் கண்களுக்கு முக்கிய பங்குண்டு. அத்தகைய கண்களில் சிலருக்கு கருவளையம், களைப்பு போன்றவை ஏற்படும். அவற்றை போக்க வாழைப்பழத்தில் சிறிது பாலை விட்டு, மசித்து கண்களைச் சுற்றி தடவ வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
எனவே பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் செல்வதை விட, வீட்டில் சமையலறையில் இருக்கும் பொட்களை வைத்தே, ஈஸியாக அழகைப் பராமரித்து, வீட்டு அழகியாக ஜொலியுங்கள்...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடையின் அழகு ராணி நீங்க தான்
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» விண்ணில் துகளால் ஆபத்து: நகர்த்தப்படும் விண் நிலையம்
» சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு!
» சிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum