பெண் பிள்ளைகளின் மன நிலை மாற்றம் ஏன்?
Page 1 of 1
பெண் பிள்ளைகளின் மன நிலை மாற்றம் ஏன்?
தமிழ்.வெப்துனியா.காம்: பொதுவாக பெற்றோர்களை எதற்காகவும் தவிர்க்க மாட்டார்கள் பெண் பிள்ளைகள். அவர்களை ஏமாற்றவும் மாட்டார்கள். ஆனால் தற்பொழுது அந்த மாதிரியான நிலை இல்லாமல் மாறிக்கொண்டு வருகிறார்கள். இது எதனால் ஏற்படுகிறது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்: ஒரு தம்பதி வந்திருந்தார்கள். அவர்களுடைய பெண்ணை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து, வளர்த்து எல்லாம் செய்திருக்கிறார். ஆனால், கடந்த 3 மாதங்களாக ஒரு பையனை காதலிப்பது தெரிய வந்திருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், அவர்கள் இரண்டு பேருக்கும் (கணவன் - மனைவிக்குள்) சில பிரச்சனைகள் உண்டு. அப்பா, அம்மா சண்டையைப் பார்த்துப் பார்த்து இந்தப் பெண் வெறுப்படைந்து, இதற்கு அன்பா, ஆதரவா யாராவது பேசுவார்களா என்று பார்த்து, அந்த மாதிரி அன்பா பேசறப் பையனை அவள் நேசிக்க ஆரம்பித்தாள். இந்த மாதிரியான சில விடயங்களும் உண்டு.
அதனால், இந்த வளர்ப்பு முறையில் பார்க்கும்போது, முன்பெல்லாம் பள்ளி முடிந்து வந்தால் அப்பா, அம்மா கூட உட்கார்ந்து பேசக்கூடிய நேரம் மிக அதிகம். இப்பெல்லாம் அவரவர்களுக்கு என்று தனி அறைகளை கொடுத்துவிடுகிறார்கள். அப்படியே இருந்தாலும் சீரியல் பார்ப்பதற்கும், சினிமா பார்ப்பதற்கும்தான் எல்லோரும் ஒன்றாக உட்காருகிறார்கள்.
இதனால் மனம் விட்டுப் பேசக்கூடிய நிலை மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் முழுமையான புரிந்துணர்வு ஏற்படாமல் பிரிவுகள் ஏற்படுகின்றன.
தமிழ்.வெப்துனியா.காம்: எனவே, இது முற்றிலும் ஒரு சமூகச் சூழல்தான் காரணம் என்று கூறுகிறீர்கள்
ஆமாம், அதில் சந்தேகமே இல்லை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி மாற்றம்
» இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு
» இரண்டாம் நிலை பெண் சிறைக்காவலர்கள் தேர்வு
» மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!
» மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....
» இரண்டாம் நிலை ஆண்/பெண் காவலர்கள் தேர்வு
» இரண்டாம் நிலை பெண் சிறைக்காவலர்கள் தேர்வு
» மனநிலை பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் மீது பாலியல் வல்லுறவு!
» மண் மாற்றம் செடிகளை புத்துணர்ச்சியாக்கும் ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum