வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்
Page 1 of 1
வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசன விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 138-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
சத்தியஞானசபை தொடர்ந்து சத்திய தருமசாலை, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம், வள்ளலார் அவதரித்த மருதூர், வள்ளலார் வாழ்ந்த கருங்குழி ஆகிய இடங்களிலும் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
ஞானசபையின் சதுரபீடத்தில் நிலைக்கண்ணாடிக்கு முன் கருப்பு, செம்மை என 7 நிறங்களில் ஏழு திரைகள் உண்டு. சரியாக 6 மணி ஆனதும் நிலைக்கண்ணாடிக்கு முன் காணப்பட்ட அந்த 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது.
அப்போது நிலைக்கண்ணாடிக்கு பின் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி தந்தது. அங்கே வந்திருந்த பக்தர்கள் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற அகவலை பக்திபரவசத்துடன் ஓதி ஜோதி தரிசனம் செய்த காட்சி அருட்பிரகாச வள்ளலாரை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெற்றது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஜோதி தரிசனம்
» மகர ஜோதி மகர ஜோதி
» சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
» ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம்
» தீப மங்கள ஜோதி நமோ நம!
» மகர ஜோதி மகர ஜோதி
» சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
» ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம்
» தீப மங்கள ஜோதி நமோ நம!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum