சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
Page 1 of 1
சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மகர ஜோதி தரிசனத்தைக் கண்டு ரசித்தனர்.
மகரவிளக்கு கால பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இந் நிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் திங்கள்கிழமை நடந்தது. அதற்கு முன்பாக திங்கள்கிழமை முக்கிய பூஜைகளில் ஒன்றான மகர சங்கரம பூஜை நடைபெற்றது.
பூஜையின்போது ஐயப்பன் விக்ரகத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைக்காக திருவிதாங்கூர் மன்னர் அரண்மனை கவடியாரில் இருந்து நெய் விடப்பட்டது. நெய் தேங்காய் உடைக்கப்பட்டு, நேரடியாக விக்ரகத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது மகரசங்கரம பூஜை நடைபெற்றதால் காலை 3 மணிக்குத் தொடங்கும் நெய் அபிஷேகம் 6.15 மணி வரை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 1.30 மணிக்கு நடைசாத்தப்பட்டது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.
இதற்கிடையே, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து புறப்பட்டு மதியம் பம்பை கொண்டுவரப்பட்டன. பின்னர் திங்கள்கிழமை மாலை 6.29 மணிக்கு சன்னிதானம் கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரருராஜீவரரு, மேல் சாந்தி தாமோதரன் போற்றி ஆகியோர் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஐயப்பனுக்கு தீபாராதனை நடந்த சமயத்தில் மாலை 6.43 மணி அளவில் பொன்னம்பல மேட்டில் முதல் ஜோதி தோன்றியது. இதன் பிறகு இருமுறை ஜோதி தோன்றியது. அப்போது சபரிமலையைச் சுற்றிலும் குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் மகரஜோதியை தரிசனம் செய்தனர். மகரஜோதியைத் தொடர்ந்து சபரிமலை கோயில் நடை செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. வரும் 19-ம்தேதிவரை இதுபோல் காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பிற்பகல் 1.30 மணிக்கு அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். 19-ம்தேதி காலை 11.30 மணிக்கு மகர விளக்கு நெய் அபிஷேகம் நிறைவுபெறும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013

» சபரிமலையில் வழிபாடும், ஐதீகமும்
» சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
» வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்
» ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம்
» சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
» சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
» வடலூர் சத்தியஞான சபையில் ஜோதி தரிசனம்
» ஐயப்பன் கோயில் மகர ஜோதி தரிசனம்
» சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum