அய்யப்பன் உபதேசம்
Page 1 of 1
அய்யப்பன் உபதேசம்
பகவான் ஐயப்பன், பக்தர் களோடும் படையினரோடும் நீலிமலை ஏறிச் சபரிக்குச் சென்றபோது, வழியிடையில், இனி ஆயுதங்கள் தேவை யில்லை யாதலால் ஓர் ஆல மரத்தடியில் ஆயுதங்களைப் போடுமாறு படையினர்க்கு ஆணையிட்டார். படைவீரர் களும் அந்த ஆலமரத்தின் அடியில் ஆயுதங்களைப் போட்டனர்.
அப்போது ஐயப்பன் அந்த ஆலமரத்தடியில் அவர் களுக்குச் சில உபதேசங்கள் அருளினார். ``பற்றற்ற கருமம் செய் வோமானால் மனம் மாசு பெறாது; தூயமனத்தில் ஞானம் ஒளிரும்; ஞானம் வாழ்வின் இலட்சியம்; நற்கருமத்திற்கு இடை ïறாவது மலம், வெகுளி, பேராசை முதலியன; இவற்றை அழிக்கக் கடவுள் தியானம் அவசியம்.
தியானத்தில் மனம் நிலைபெறும் போது சாந்தியும், பேரின்பமும் உண்டாகும். கடவுளிடம் சரணாகதியடைதலே பக்தியின் இறுதிமொழி. `சரணம் ஐயப்பா' என்ற சரணாகதி மந்திரத்தை தூய மனத்துடன் ஓதுகிறவன் முக்தி பெறுவான். பதினெட்டுப்படி ஏறிவரும் சாஸ்தாவின் சந்நிதி எட்டியதும் கடவுள் தரிசனம் கிடைக்கிறது.
இந்தப் பதினெட்டுப் படிகளும் பதினெட்டுத் தத்துவங்களாகும். அவையாவன:- புலன் ஐந்து, பொறி ஐந்து, பிராணன் ஐந்து, மனம், புத்தி, அகங்காரம் இவைகளைக் கடந்தவனே கடவுளைக் காண இயலும்.'' இவ்வாறு உபதேசம் அருளிய ஐயப்பன் சாஸ்தா கோயிலின் வடதிசையில் உள்ள கோயிலுள் மதுரை மீனாட்சியம்மனைப் பிரதிட்டை செய்த பின்னர், அங்கு இருந்த அனைவருக்கும் அருள்காட்டி உபதேசம் வழங்கியருளினார்:-
``இனிமேல் சபரிமலை மிகச் சீரும் சிறப்புமாக விளங்கும். இன்னும் ஏராளமானப பக்தர்கள் ஆண்டு தோறும் தவறாமல் சபரியாத்திரை வருவார்கள்.
நாம் கைக்கொண்ட முறைகளைப் பின்பற்றி (41 நாட்கள்) ஒரு மண்டலம் விரதம் இருந்து புறப்பட்டு எருமேலி, காளைகட்டி, இஞ்சிப்பாறைக் கோட்டை, கரிமலை, சபரிபீடம், சரங்குத்தி ஆல், வசுவடு, பதினெட்டாம்படி இவைகளைக் கடந்து, முக்கியமான இடங்களில் நாம் செய்த சடங்குகளைத் தவறாமல் செய்து, சாஸ்தாவின் அருள் பெறுவார்கள்.
பம்பா தீர்த்தமாடி, பித்ரு தர்ப்பணம், குருதட்சணை, தீபக்காட்சி, நதிபூஜை முதலியன செய்து புண்ணியம் பெறுவார்கள். பகவான் ஐயப்பன் தமது வாழ்வின் வாயிலாகவும், உபதேசங்கள் மூலமாகவும் மக்கள் உள்ளத்தில் தூய்மையும், இறைபற்றும் தோன்றச் செய்து, தர்மம் நிலை கொள்ளுமாறு அருள்புரிந்தார்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum