கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் தேவை!!!
Page 1 of 1

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு, மற்ற பிரச்சனைகளை விட கூந்தல் பிரச்சனையே அதிகமாக உள்ளது. அந்த கூந்தல் பிரச்சனையில் முக்கியமானது, கூந்தல் உதிர்தல், கூந்தல் வளர்ச்சி குறைவாக இருப்பது போன்றவைகளே. இத்தகைய பிரச்சனைகள் வருவதற்கு பெரும் காரணம், உடலில் போதிய வைட்டமின் இல்லாததே ஆகும். ஆகவே அதிக வைட்டமின்கள் இருக்கும் உணவுகளை உண்டால், கூந்தல் வளர்ச்சி அதிகமாவதோடு, தலையும் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் குறையும். ஆகவே எந்த வைட்டமினில் என்ன சக்தியுள்ளது, எந்த பொருட்களை சாப்பிட்டால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, நீளமாக வளரும் என்பதை சற்று படித்துப் பாருங்களேன்...
வைட்டமின் ஏ சத்து கூந்தலின் வளர்ச்சி மற்றும் வலுவில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. அதற்காகத் தான் தலைக்கு குளித்தப் பின் கண்டிஷனரைப் பயன்படுத்துகிறோம். அதுமட்டுமல்லாமல் வைட்டமின் பி-இல் இன்னும் பல வகைகள் உள்ளன. அதில் வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் பி5 சத்துக்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, கூந்தல் உதிர்வதை தடுத்து, வெள்ளை முடிகள் வருவதையும் தடுக்கிறது. இத்தகைய சத்துக்கள் பால் பொருட்கள், தானியங்கள், இறைச்சி மற்றும் முட்டையில் அதிகம் இருக்கின்றன.
வைட்டமின் சி மற்றும் டி சத்துக்களும், அதே வேலையைத் தான் செய்கிறது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதால், அதில் இருக்கம் இரும்புச் சத்துக்களை உறிஞ்சி, கூந்தல் உதிர்வது குறைந்து கூந்தல் ஆரோக்கியமாக, நீளமாக வளரும். சொல்லப்போனால் வைட்டமின் சி, வைட்டமின் ஏ-யை விட மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை உண்பதால், தலையில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் நன்கு வேலை செய்து, கூந்தலுக்கு தேவையான எண்ணெயை அளிப்பதோடு, கூந்தலை ஆரோக்கியமாக வளரச் செய்கிறது.
வைட்டமின் ஈ தான் மிக முக்கியமான சத்தாகும். இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்டால், உடலில் இரத்த ஓட்டம் தலையில் சரியாக நடப்பதோடு, புதிதான செல்களை உருவாக்கி, கூந்தலை வளரச் செய்கிறது. இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் கிடைப்பது மிகவும் ஈஸியானது. அதற்காகத் தான் நம் முன்னோர்கள் சொல்வார்கள், கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்ந்தால், எந்த பிரச்சனையும் உடலில் வராமல் இருக்கும்.
ஆகவே வைட்டமின் அதிகம் இருக்கும் உணவுகளான இறைச்சியில் சிக்கன், மட்டன், மாட்டு இறைச்சி, முட்டை, பால் பொருட்கள், காய்கறிகள், கீரை, பழங்கள் மற்றும் இதர தானியங்கள் என்று அனைத்தையும், தினமும் உணவில் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால், எந்த குறையுமின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் தேவை!
» கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்
» கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்!
» வாழவைக்கும் வைட்டமின்கள்:
» வைட்டமின்கள் அறிவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum