EBAY மூலம் பொருட்களை வாங்குவது செய்வது எப்படி?
Page 1 of 1
EBAY மூலம் பொருட்களை வாங்குவது செய்வது எப்படி?
இணையத்தில் பொருட்கள் வாங்க பெயர் போன ஒரு தளம்தான் Ebay .இதில் இருந்து பொருட்கள வாங்குவது எப்படி என்று பார்ப் போம்.
01. ebay.com இற்கு சென்று உங்களுக்கு தேவையான பொருளை தேடி பெருங்கள்.
அந்த பொருள் பற்றிய விற்பனை யாளரால் தரப்ப்பட்டு இருக்கும் விளக் கத்தை கவனமாக படியுங்கள். இல்லை யென்றால் பொருள் வீட்டுக்கு வந்த பிறகு அதை காணல இதை காணல என்று கவலைப்பட கூடிய நிலைதான் காணப்படும் (அனுபவம்)
நான் ebay இல் solar charger வாங்கும்போது, description இனை முழுமை யாக வாசிக்காமல் ஆரம்பத்தில் வாங்கி விட்டேன். 6 நாட்களுக்கு பின் வீடு தேடி பொருள் வந்தது, பிறித்து பார்த்தேன் எல்லாம் இருந்தது ஆனால் AC Adapter இருக்க வில்லை என்னடா… இது என்று மறுபடியும் பொருள் பற்றிய விளக்கத்தை சரியாக வாசித்து பார்த்தேன் AC Adapter (not included)என்று இருந்தது.அதான் உங்களுக்கும் ஞாபக படுத்துகி றேன். பொருள் பற்றிய description ஐ அவதானமாக வாசிக்கவும்.
பொருள் பற்றிய விளக்கத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தா ல், Ask a question என்பதை க்ளிக் செய்து அது பற்றி விற்பனையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
02.விற்பனையாளரை பற்றிய தெரிந்து கொள்ளவும்.
நாம் தேடும் பொருட்களை பலபேர் வைத்து இருப்பார்கள், இதில் யாரிடம் வாங்குவது? என்ற கேள்வி உங்குளுக்கு வரும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவசிய பொருட்களை விற்பனை செய்ய எத்தனை எத்தனை சில்லறை வியாபாரிகள் ஒவ்வொரு தெருக்கலிலும் காணப்படு கிறார் கள். இருந்தாலும் நாம் அனைவ ரிடமும் வாங்குவதில்லை, ஒரு சிலரிடமே வாங்குவோம் . காரண ங்கள் பல இருந்தாலும் குறிப்பாக விலை மற்றும் தரத்தினையும் குறிப்பிட முடியும்.
அது போல் தான் இந்த ebay இல் நீங்கள் பொருட்கள் வாங்கும் போது விற்பனையாளரிடம் Top Rated Plus என்ற சின்னம் இருக்கிறதா என்று பாருங்கள்,
அடுத்து பொருள் பிடிக்கவில்லையென்றால் திருப்பி அனுப்பி, பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமா? என்றும் பாருங்கள் அத்துடன் அந்த பொருள் இலவசமாக ( Free shipping ) நமது வீட்டை வந்து சேருமா? அல்லது அதற்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமா என்று பாருங்கள்.
03.அது என்ன Bid அல்லது Buy It Now?
Bid என்பது ஏல விற்பனை முறையை குறிக்கும். விற்பனையா ளர் பொருளின் விலையை விட குறைந்த விலையில் ஏலத்தை ஆரம்பித்து வைத்திருப்பார். விரும்பியவர்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் ஏலம் கேட்க முடியும்.குறிப்பிட்ட ஒரு காலத்தை (ஒரு வாரம்) அடிப்படையாக கொண்டு இந்த ஏலம் நடக்கும். யார் அதிகமாக ஏலம் கேட்டுடிருந்தாரோ அவர் 3 நாட்களு க்குல் விற்பனையாளருக்கு பணத்தை கொடுத்து, பொருளை பெற முடியும்.
Buy It Now என்பது பொருளை உடன டியாக வாங்குவதை குறிக்கும்.
04.அடுத்து ebay இல் உங்களுக்கு என்று ஒரு கணக்கை ஆரம்பியு ங்கள்.
வீட்டு முகவரியை சரியாக கொடுங் கள்.இல்லை என்றால் பொருள் வேறு நபர்களுக்கு சென்றுவிடும் வாய்ப்பு உள்ளது.
05.பணம் கொடுப்பது எப்படி?
உங்களிடம் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் (Master or Visa or Amex) இருக்க வேண்டும் (இல்லை என்றாலும் வாங்க முடியும் ஆனால் எல்லா விற்பனையாளரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்)
Card பற்றிய விபரங்களை சரியாக கொடுப்பது பற்றியும் அதை எப்படி Online இற்கு அக்டிவ் செய்வது என்றும் தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்
அவ்வளவுதான்….பொருட்கள் உங்கள் கைகளுக்கு கிடைத்த பின் அந்த விற்பனையாளர் பற்றி உங்கள் கருத்துக்களை மறந்து விடாமல் கூறுங்கள்.
(இது பற்றிய அறிவுறுத்தல் ebay மூலம் வழங்கப்படும்)
இணையத்தின் மூலம் கொடுக்கள் வாங்கள் செய்வதற்கு என்று avast! Internet Security இல் Avast Safe-zone! என்ற வசதி இருக்கிறது, விரும்பினால் முயற்சி செய்து பாருங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» EBAY மூலம் பொருட்களை வாங்குவது செய்வது எப்படி?
» பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?
» பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?
» பெர்ஃப்யூம் வாங்குவது எப்படி? பயன்படுத்துவது எப்படி?
» கார் வாங்குவது எப்படி?
» பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?
» பஞ்சகவ்யா மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி?
» பெர்ஃப்யூம் வாங்குவது எப்படி? பயன்படுத்துவது எப்படி?
» கார் வாங்குவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum