பாத நகங்களை பராமரிக்க அசத்தலான டிப்ஸ்
Page 1 of 1
பாத நகங்களை பராமரிக்க அசத்தலான டிப்ஸ்
கைவிரல் நகங்களுக்கு காட்டும் அக்கறையை பெரும்பாலோனோர் பாத விரல் நகங்களுக்கு காட்டுவதில்லை. இதற்கு காரணம் அது யார் கண்ணிலும் படாமல் மறைவாக இருப்பதுதான். கைவிரல் நகங்களைப் போல போலவே கால்விரல் நகங்களையும் கவனிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பாதங்களை அழகு படுத்த அழகு நிலையங்களில் பெடிக்யூர் செய்யப்படுகிறது. இதற்கு அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால் வீட்டிலேயே நகத்தை அழகு படுத்த ஆலோசனை கூறுகின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பாருங்களேன்.
அதிகம் வளர்ந்தால் ஆபத்து
பாத நகங்களை அதிகம் வளரவிடக்கூடாது. ஏனெனில் அவை அடர்த்தியாக வளர்ந்து திக்காகிவிடும். எனவே விரலை தாண்டி வளர்ந்தாலே அவற்றை வெட்டி ஷேப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் சதையில் குத்தி காயம் ஏற்படுத்திவிடும்.
கால் நகங்கள் அதிக கடினத்தன்மையுடன் இருக்கும் அவற்றை எளிதில் வெட்ட முடியாது. நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.
பாத நகங்களும் அழகாக
மிக நீண்டதாக வளரும் நகங்கள் உள்நோக்கி வளரலாம் மற்றும் உங்கள் பாதங்களை பதம் பார்த்துக் காயங்களை ஏற்படுத்தும். நகங்களை வெட்டும் முன் கால்களை சிறிது தண்ணிரில் கழுவி விட்டு சிறுது நேரம் கழித்து வெட்டும் போது நகங்கள் காயங்கள் ஏதும் ஏற்படாமல் எளிதாகத் வெட்டலாம்.
படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி உங்களின் பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.
மஞ்சள் நகங்களா?
ஒரு சிலருக்கு பாதத்தில் நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அவர்கள் உடனடியாக நகங்களை கவனிக்கவேண்டும். நகங்களை நன்றாக உரசி எடுத்துவிட்டு பாலீஸ் போடலாம். நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ்ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.
பாதங்களில் ஒருவாரத்திற்கு மேல் நெயில் பாலீஸ் போடவேண்டாம். ஏனெனில் அது பாத நகத்தின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. எனவே பாலீஸ் ரிமூவர் கொண்டு நகத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள். நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
பளபளப்பான நகங்கள்
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து கால் நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.
ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.
ஊட்டச்சத்துள்ள உணவு
நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும். நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
அழகியல் நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றினாலே போதும் ஆரோக்கியமான, அழகான பாத நகங்கள் கிடைக்கும். பாத நகங்களை அக்கறையுடன் பராமரிப்பதன் மூலம் பெரும்பாலான நோய்களில் இருந்து பாதுகாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நகங்களைப் பராமரிக்க சில டிப்ஸ்!
» குளிர்காலத்தில் முடியைப் பராமரிக்க சில டிப்ஸ்...
» உங்கள் புருவங்களை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்.
» அசத்தலான ஆட்டு ரத்த பொரியல்
» ஆன்மிகத்தில் அசத்தலான கேள்விகளும் ஆணித்தரமான பதில்களும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum