தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாஸ்து வாஸ்து

Go down

வாஸ்து  வாஸ்து  Empty வாஸ்து வாஸ்து

Post  meenu Thu Feb 07, 2013 2:10 pm


மனிதர்கள் தவறு செய்வதில்லை. அந்தத் திறன் மனிதர்களாகிய நமக்கு கிடையாது. நாம் வசிக்கிற வீடுதான் நம்மை தவறு செய்யத் தூண்டுகிறது. திறமைகளை கூராக்குகிறது அல்லது மழுங்கடிக்கிறது.
பஞ்சபூதங்களின் விளையாட்டுக் களமாக இருப்பது வீடுதான். குடிசை, மாளிகை, பிளாட்பாரம் என மனிதனின் வாழ்விடம் எதுவாக இருந்தாலும், அவன் வாழுமிடத்தின் புறச்சூழல்தான் விதியின் பாதையில் அவனையும் அவனது குடும்பத்தையும் அழைத்துச் செல்கிறது.
சொந்தவீடோ, வாடகை வீடோ தாங்கள் வசிக்கும் வீட்டின் ஸ்திதியை அதாவது நிலையை அறியாதவர்கள் தங்களையே அறியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்.
ஒருவர் வாஸ்து சாஸ்திரத்திற்கு ஆதரவாக வாதிக்கலாம். மற்றவர் வாஸ்துக்கு எதிராக ஆதாரங்களை முன் வைத்து அவரை வீழ்த்தலாம். இவர்களின் நீயா நானா- யுத்தமானது பொருளற்றது.
செய்தித்தாள் ஒன்றில் கொட்டாவி விட்டவர் மீண்டும் வாயை மூட முடியாமல் மயங்கி விழுந்த சம்பவத்தை படிக்க நேர்ந்தது. நாலரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது வாயை மூட வைத்த மருத்துவர்கள் கூறிய கருத்து என்னவென்றால், தாடை திடீரென செயலிழந்து விட்டதால் வாயை மூட இயலாமல் ஆகிவிட்டது. இது போன்ற சூழ்நிலையில் கன்னத்தை ஒரு பக்கமாக தரையில் வைத்துப் படுத்துக்கொள்ள வேண்டும். புவி ஈர்ப்பு விசையானது தனது ஈர்ப்பு விசையால் தாடையை இயங்கச் செய்துவிடும் என்பதாகும். இந்த புவி ஈர்ப்பு விசையின் பெயர்தான் வாஸ்து!
இந்த வாஸ்துவுக்கு உயிர்கொடுப்பவர் சூரியன்!
புவி ஈர்ப்பு விசையின் காரணமாக பூமிக் கோளத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் வீடுகள். சூரிய ஒளியைப் பெற முடியாமல் போனால் கொட்டாவி விட்டவரின் தாடையை போன்று செயலிழந்து விடுகின்றன. வேண்டாதவைகள் உள்ளே நுழைந்து விடுவதால் விபரீதங்கள் ஏற்படுகின்றன. இப்படி ஒரு வீட்டை பெங்களுர் மல்லேசுவரத்தில் பார்க்க நேர்ந்தது.
அது கிழக்குப் பார்த்த வீடு என்றாலும், கிழக்கு எல்லை வரை கட்டப்பட்ட வீடு. வடக்கில் ஜன்னல்கள் இல்லை. ஏனென்றால், பக்கத்து வீட்டின் சுவரும் இவர்களது சுவரும் ஒன்றே. அதாவது, பொதுச் சுவர். வீட்டின் உரிமையாளருக்கு நான்கு பெண்கள், ஒரு பையன். எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது.
பையனுக்கு திருமணமாகி ஆறு மாதமான நிலையில், மருமகளின் வற்புறுத்தலால் தனிக் குடித்தனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த ஆறாவது மாதத்தில் ஒரு பெண் மகவு பிறக்க, குடும்பத்தினர் பூரிக்க, தாய்வீட்டுக்குப் போன மருமகள் மூன்று மாதம் கழித்தும் வருவதாக தெரியவில்லை. ஒரு வழியாக கெஞ்சிக் கூத்தாடி அவளை அழைத்து வந்தால், வந்த இரண்டாம் நாளே விஷம் குடித்து விட்டாள். போலீசார் வந்து மணமகன் குடும்பத்தை அரசுமரியாதையுடன் அழைத்துச் சென்று உள்ளே தள்ளிவிட்டனர்.
உள்ளுர் மகளிர் அமைப்புகள் மருமகளுக்கு ஆதரவாக பத்திரிகைகளில் அறிக்கைகள் விடுக்க. எல்லா பத்திரிகைகளிலும் மாமியார் என்ற உருவில் மாபாதகி என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின.
பதினைந்து நாள் ரிமாண்டில் இருந்துவிட்டு வெளியே வந்த மணமகனின் குடும்பம் கூண்டோடு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படது. வழக்கு, கோர்ட்டில் தீவிரமாக விசாரணையில் இருந்த வேளையில் மணமகன் வீட்டாரின் அழைப்புக்கிணங்க அவர்களது வீட்டுக்குப் போயிருந்தேன்.

கவலைப்படாதீர்கள். நான் சொல்கிற சீர்த்திருத்தங்களை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் செய்யுங்கள் என்று கூறினேன்.
இடித்துத்தான் ஆகவேண்டுமா? இடிக்காமலே வேறு பரிகாரம் இல்லையா? இப்படி அப்பாவித்தனமாக கேட்டார் பையனின் தாயார்.
எல்லாம் வல்ல சூரிய சக்தியைவிட பெரிய சக்தி இந்த பிரபஞ்சத்தில் உள்ளதாக நான் நினைக்கவில்லை. நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு தினத்தையும் சூரியத்தேவனே நகர்த்துவதால் அவனை தினகரன் என்கிறோம். உங்கள் மகனின் எதிர்காலமும் உங்கள் நான்கு மகள்களின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால். என்னை நம்பி அல்ல: அந்த சூரியக் கடவுளை நம்பி வேலையை ஆரம்பியுங்கள் என்றேன்.
அவர்களது வீட்டின் தரைத் தளத்தில் அக்னி மூலையில் இருந்த சிறு தொழிற்கூடத்தை எடுத்துவிட்டு அங்கே சமையலறையை அமைக்கச் செய்தேன். இதற்கு முன்பு நைருதியில் அது இருந்தது.
முதல் தளத்தில் கிழக்குத் திசையை மூடி கட்டப்பட்டிருந்த கழிவறை உடைத்து அப்புறப்படுத்தப்பட்டது. இரண்டாவது தளத்தில், நைருதி கழிப்பறை எடுக்கப்பட்டு வாயு மூலைக்கு மாற்றப்பட்டது. இந்த முன்று மாற்றங்களைச் செய்ததும், சரியாக இருபதாவது நாளில் மகளிர் அமைப்புகள் பெண் வீட்டாரின் நாடகத்தைப் புரிந்துக் கொண்டு தங்கள் கோஷத்தை குறைத்துக் கொண்டார்கள்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திடீரென மாற்றலாகி புதிய நீதிபதி வந்தார். வழக்கை கோர்ட்டுக்கு வெளியே முடித்துக் கொள்ளுமாறு பெண்வீட்டாரிடம் கறாராக சொல்லிவிட்டார்.
மூன்று மாதம் கழித்து நான் அந்த வீட்டுக்கு போனபோது, குடும்பமே ஆனந்தக் கண்ணீர்விட்டு என்னை வாழ்த்தினர்.
ஒரு வீட்டிற்கு வாஸ்து பார்க்கும் போது வீட்டில் உள்ளவர்களுக்கு பணப் பிரச்சினையா, மனப் பிரச்சினையா என்று முதலில் கண்டறிய வேண்டும். கொலை, தற்கொலை, காதலித்து ஓடிப் போதல், கோர்ட்டு வழக்கு போன்றவை மனம் சார்ந்த பிரச்சினைகளே!
வாஸ்து பார்த்து வீட்டை சரி செய்துக் கொள்வது கூரையை பிரித்துக் கொண்டு பணம் கொட்டுவதற்காக அல்ல என்பதை நாம் புரிந்து கொள்வது நலம்



வடமேற்கு என்பது வாயு மூலை. தென் கிழக்கு என்பது அக்னி மூலை வாயுமூலை உயர்வதால் என்னென்ன விதமான பிரச்சனைகள் தோன்றும்?
ஆண்களின் இதயத்தையும் பெண்களின் கர்ப்பப் பையையும் வாயு மூலை கட்டுப்படுத்துகிறது. இதுதவிர, இருபாலருக்கும் மனநிலை தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் வாயுமூலையே காரணமாகிறது.
அக்னி மூலை என்பது பெரும்பாலும் பெண்களுடன் தொடர்பு உள்ளது. அக்னி மூலையில் கிணறு இருந்து, மனையும் ஆக்கினேய பகுதியிலேயே (கிழக்கு, தெற்கு ரோடுகளுடன்) அமைந்தால் பெண்களின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் சரிபாதிக்கும் மேல் குறைந்து, ரத்தப்புற்று நோய் உண்டாகிறது.
மனையின் தென்கிழக்கில் நீரோடையோ அல்லது வற்றாத குளமோ இருப்பின், பல பெண்டிர் கைகால் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர். சிலருக்கு முடக்குவாதம் உண்டாகி படுக்கையில் வாழ்நானள கழிக்க வேண்டிய துர்பாக்கியநிலை ஏற்படுகிறது.
தென்கிழக்கில் நீரோடையும் வடமேற்கில் கிணறும் ஒரு சேர அமைந்துவிட்டால், அது போன்ற வீடுகளில் பாதங்கள் வளைந்த பெண்குழந்தைகள் பிறக்கின்றன. தென்மேற்கை (நைருதி) விட வடமேற்கு (வாயைவியம்) உயர்ந்தால் & அந்த வீட்டில் வாழ்பவர்கள் எதையும் ஆச்சரியத்துடனும் பிரமிப்புடனும் அணுகும் மனநிலைக்கு ஆளாவார்கள்.
ஓ... அப்படியா! அய்யய்யோ! அடேங்கப்பா! என்று வார்த்தைக்கு வார்த்தை ஆச்சரியக்குறிகள் கொட்டும். ஆக்கினேயும் வம்பு வழக்கையும் வாயு வீண் செலவையும் குறிப்பதால், வடமேற்கு உயர்ந்து தென் மேற்கு தாழ்ந்து இடங்களில் எப்பொழுதும் பணப் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக இதுபோன்ற அமைப்பில் உள்ள மனைகளும் வீடுகளும் தாம்பத்ய சுகத்துக்கு முட்டுக்கட்டை போடுபவை என உறுதியாக கூறலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum