கன்னி ராசி கன்னி ராசி
Page 1 of 1
கன்னி ராசி கன்னி ராசி
உத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)
இரண்டாமிடத்தில் சனி! இலாபம் குவியும் இனி!!
சகலகலா வல்லவர்களாக இருந்தாலும், சாதுவைப் போல காட்சியளிக்கும் கன்னி ராசி நேயர்களே!
நீங்கள் புதனின் ஆதிக்கத்தைப் பெற்றவர்கள். எனவே, புத்திசாலித்தனத்திற்கு சொந்தக்காரர்கள். மற்றவர்கள் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை.
ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே எடை போடுவதில் பலே கெட்டிக்காரர்களாக நீங்கள் விளங்கினாலும், சில சமயங்களில் ஏமாற்றங்களையும் பெரிய அளவில் சந்தித்து விடு வீர்கள். வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, அதிகபட்சமான பொருத்தம் இருப்பதோடு, திருமண நாள் குறிக்கும் பொழுதும், பொருத்தமான நாளாக அமைந்தால் தான் வருத்தமில்லாத வாழ்க்கை அமையும்.
குறிப்பாக, உங்கள் ராசிநாதன் புதன் இருக்கும் சார பலமறிந்து பரிகாரங்களைச் செய்தால் தொழில் வளம் மேலோங்கும். உங்கள் ராசிநாதன் புதன் நவாம்சத்தில் இருக்கும் நிலையறிந்து, அதைப் பார்க்கும் கிரகத்தையும், அதோடு இணைந்திருக்கும் கிரகத்தையும் சேர்த்து ஆராய்ந்து, அதற்குரிய எண்ணின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும் அமைத்துக் கொண்டால், வாழ்க்கை வளமாக அமையும்.
இப்படிப்பட்ட, குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சி தானா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
லாபத்தைக் குவிக்குமா? இரண்டாமிடத்துச் சனி!
மார்கழி 5-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சனி சஞ்சரிக்கப் போகிறார். இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்து சிரமங்களையும், சிக்கல்களையும் கொடுத்திருக் கலாம். சிந்திக்காது செய்த காரியங்களால் மனநிம்மதி குறைந்திருக்கலாம். இனி இந்த நிலைமை மாறி பொருளாதார வளர்ச்சி கூடும்.
இரண்டாமிடம் சனிக்கு உச்ச வீடாகும். எனவே, உச்சம் பெற்ற சனி, இனி ஒப்பற்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். லட்சம் லட்சமாக சம்பாதிக்க கூட்டாளிகள் வந்திணைவர். அங்கிருந்து கொண்டு, 4, 8, 11 ஆகிய இடங்களைப் பார்த்துப் புனிதப் படுத்துகிறார். எனவே, தாய், வாகனம், சுகங்கள், இழப்புகளை ஈடுசெய்யும் வாய்ப்பு, உடல்நிலை, வியாபாரம், வீடு மாற்றங்கள், பயணங்கள், இளைய சகோதரம் ஆகியவற்றிற் குரிய ஆதிபத்யங்களில் எல்லாம் நல்ல மாற்றங்களை வழங்கப்போகிறார்.
இந்த இரண்டாமிடத்துச் சனிப் பெயர்ச்சியால் எல்லாவிதத்திலும் நன்மை கிடைத்தாலும், ஒரு சில வழிகளில் மன அமைதி குறையலாம். குறிப்பாக வாக்கு ஸ்தானம் இரண்டாமிடம் என்பதால், பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் யோசித்துச் செய்வது நல்லது.
இதுபோன்ற காலங்களில் வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டு வருவது நல்லது. வாழைப்பழ விளக்கேற்றியும், வெற்றிலை மாலை சூட்டியும் வழிபாடு செய்யலாம். சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் உள்ள கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், சுந்தரவல்லித் தாயார் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு அங்குள்ள வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள்.
மந்தன் பார்வையால் ஏற்படும் மகத்தான பலன்கள்!
உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியின் பார்வை 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவதால் வீடு வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை போதும் என்று சொல்லி விருப்ப ஓய்வு பெற்று, வீட்டிற்கு வந்து நல்லதோர் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வாகன மாற்றம் செய்து மகிழும் நேரமிது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். கட்டிய வீட்டை பழுதுபார்ப்பதும், கெட்டிமேளம் கொட்டுவதும் இந்த நேரத்தில் தான்.
எட்டாமிடத்தைச் சனி பார்ப்பதால் ஒரு சிலருக்கு வீடு மாற்றங்கள், நாடு மாற்றங்கள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் உத்யோக வாய்ப்பு உருவாகி, வாயில் கதவைத் தட்டும். உச்ச சனியின் பார்வை அஷ்டமத்தில் பதிவது நன்மைதான். ஆறுக்கு அதிபதி எட்டாமிடத்தைப் பார்ப்பதால் விபரீத ராஜயோகம் செயல் படும் அல்லவா? எனவே, திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
குருப்பெயர்ச்சி காலம்!
சுமார் 2 1/2 ஆண்டுகள் துலாம் ராசியில் சஞ்சரிக்க வேண்டிய சனி பகவான் கூடுதலாகவே சில மாதங்கள் அந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் மூன்று முறை குருபெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. 17.5.2012-ல் ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கப் போகிறார். 28.5.2013-ல் மிதுன ராசியில் குரு உலாவரப் போகிறார். 13.6.2014-ல் குரு கடக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்.
ரிஷப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே, உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சகோதர உறவு பலப்படும்.
மிதுன ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரம் பெருகும், பூமியோகம் கிட்டும். அருளாளர்களின் தொடர்பால் அனைத்து காரியங்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால் உத்யோகத்தில் முன்னேற்றங்கள் வந்து சேரலாம். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.
இக்காலத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பட்டமங்கலத்திற்குச் சென்று அங்கு உள்ள திசைமாறிய தென்முக கடவுளை வழிபட்டு வருவது நல்லது.
கடக ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும் நேரமிது. திருமண மானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் நேரம் இது.
ராகு-கேது பெயர்ச்சி காலம்!
2.12.2012-ல் துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 21.6.2014-ல் கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவும் உலாவரப் போகிறார்கள்.
முதல் ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் இரண்டாமிடத்து கேதுவால் உங்கள் முன்னேற்றங் கள் பிறர் கண்படும் விதத்தில் அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அஷ்டமத்து கேதுவால் அலைச்சல் ஏற்பட்டாலும், ஆதாயங்கள் கிடைக்கும். உரிமையோடு பழகியவர்கள் உங்களை விட்டு விலகினாலும், மீண்டும் வந்து இணைவர்.
அடுத்த ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்தபடியே இடமாற்றங்கள் உருவாகும். கூட்டாளிகள் விலகுவர். தனித்தியங்கி செயல்பட்டு, தனக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்துக் காட்டுவீர்கள். கேதுவின் பலத்தால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதும், குழந்தைகளின் நலன் கருதி தங்கம், வெள்ளிகளை வாங்கும் சூழ்நிலையும் உருவாகும்.
சனியின் வக்ர காலம் பொற்காலமாக மாற!
துலாம் ராசியில் உச்சம் பெறும் சனி ஐந்து முறை வக்ரமடைந்து நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பிள்ளைகள் வழியில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையானவற்றில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்யோக மாற்றம் திடீரென ஏற்படும். இலாகா மாற்றம், இடமாற்றம் எதிர் பார்த்தபடி அமைய இக்காலத்தில் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. யோக பலம் பெற்ற நாளில், யோக எண்களின் அடிப்படையில் `ஸ்ரீ ராமஜெயம்’ மாலை கட்டி அனுமனுக்கு அணிவிக்கலாம். நவக்கிரக விநாயகர் படம் மற்றும் சாப விமோசனம் படங்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.
சனியின் சஞ்சாரப் பலன்கள்!
தனவரவில் தடைகளை நீக்குமா இந்தச்சனி!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த சனி பகவான், இப்பொழுது தன ஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். இது நல்ல இடம்தான். அதுவும் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்யும் இடம். பொருளாதாரத்தை வளர்ச்சி யடைய வைக்கும் இடத்தில் சனி சஞ்சரித்தால், அதனால் பண பலம் அதிகரிக்குமா, அல்லது குறையுமா என்ற சிந்தனை மேலோங்கியிருக்கலாம்.
உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடத்திற்கு அதிபதியானவர் சனி, பஞ்சமாதிபதி 2-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம் இல்லாத வாழ்க்கை அமையும் என்பது நியதி.
இரண்டில் சனி நின்றால்
எண்ணற்ற லாபம் வரும்!
வறண்ட பாறையிலும்
வற்றாத நீர் ஊறும்!
திரண்ட செல்வமுடன்
தித்திக்கும் வாழ்வமையும்!
பரந்த உலகத்தில்
பதவிகளும் வந்திடுமாம்!
என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
அந்த அடிப்படையில் தொழிலில் லாபத்தை அள்ளி வழங்கி எழிலான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கப் போகிறது இந்தச் சனிப் பெயர்ச்சி. காகத்திற்கு சோறிட்டுக் கனிவான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு, கவசம் பாடி, கைகூப்பி தொழுவ தால் நினைத்த காரியமெல்லாம் நிறைவேறும்.
தொட்ட காரியங்களில் வெற்றிபெற வழிபாடு!
ஏழரைச்சனியில் ஜென்மச்சனி விலகி குடும்பச் சனி தொடங்கும் நேரமிது. இந்த நேரத்தில் சனிக் கிழமைதோறும் விரதமிருந்து சனி கவசம் பாடி, சந்நிதியில் ஜோடி தீபம் ஏற்றினால் மணியான வாழ்க்கை மலரும். சனியின் சந்நிதியில்,
கலியுகம் தன்னில்
கவலைகள் போக்க,
வழியைக் காட்டும்
வல்லவன் சனியே!
இனிமேல் துயரம் இல்லாதிருக்க,
உனையே துதித்தேன்!
உயர்வினைத் தருக!
என்று பாடுங்கள்.
சிறப்பு வழிபாடாக, புதுக்கோட்டை மாவட்டம் பில்லமங்கலத்தில் உள்ள மகிஷாசுர மர்த்தனியின் அவதாரமான பொன்னழகி அம்மனை யோக பலம் பெற்ற நாளில் வழிபட்டு வாருங்கள். எந்நாளும் இனிமை காணலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கன்னி ராசி புத்தாண்ட பலன்
» 2013 புதுவருட ராசி பலன்கள் – கன்னி
» இனப் பெருக்கத்தில் வித்தியாசமான ஒரு கன்னி இனப் பெருக்கமும் உண்டு. அதாவது சோவியத் நாட்டில் உள்ள ஒருவகை பல்லி, கன்னி இனப் பெருக்க முறையில் பெண் பல்லி இனத்தை மட்டுமே உருவாக்குகின்றன. இதற்கு நேர்மாறான இன்னொரு அதிசயமான உதாரணம் என்னவென்றால் தேனீக்கள், குளவிகள்
» கன்னி நீ ஒரு கனி
» கன்னி பூஜை பலன்கள்
» 2013 புதுவருட ராசி பலன்கள் – கன்னி
» இனப் பெருக்கத்தில் வித்தியாசமான ஒரு கன்னி இனப் பெருக்கமும் உண்டு. அதாவது சோவியத் நாட்டில் உள்ள ஒருவகை பல்லி, கன்னி இனப் பெருக்க முறையில் பெண் பல்லி இனத்தை மட்டுமே உருவாக்குகின்றன. இதற்கு நேர்மாறான இன்னொரு அதிசயமான உதாரணம் என்னவென்றால் தேனீக்கள், குளவிகள்
» கன்னி நீ ஒரு கனி
» கன்னி பூஜை பலன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum