பொங்கல்
Page 1 of 1
பொங்கல்
திரவியம் தேடுவதற்காக கடல் கடந்து அயல் நாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் இழப்பது, நேசமுடன் வாழ்ந்த உறவினர்களையும்,துயரத்தில் தோள் கொடுத்த நண்பர்களையும் மட்டுமல்ல, தின்னத் தெவிட்டாத தமிழக உணவு வகைகளையும்தான்.
என்னதான் பீட்ஸாவும், சாண்ட்விச்சும் சாப்பிட்டாலும் அது, தண்ணீரில் மிதக்கும் தீவுகளென இருக்கும் சாம்பார் இட்லிக்கோ,ஜவ்வரி பாயசத்துக்கோ ஈடாவதில்லை. கல்யாணத்திற்குப் பின்னாவது இந்த வகை உணவுகளை வெளுத்துக் கட்டலாம்என்றால், இன்றைய பெண்கள் பலருக்கு சமையல் கலை கைவரப் பெறுவதில்லை.
அவர்களுக்கு உதவுவதற்காகவே இந்த சமையல் பக்கத்தை தொடங்கியுள்ளோம். தமிழர்களின் வாழ்வியல் கலாச்சாரத்தோடுகலந்து விட்ட சர்க்கரைப் பொங்கலை செய்வது எப்படி என்பதில் இருந்து ஆரம்பிப்போம்.
தேவையான பொருட்கள்:
2 லிட்டர் பச்சரிசி, 1400 கிராம் வெல்லம், 100 கிராம் திராட்சை, 250 கிராம் கடலைப் பருப்பு, 300 கிராம் முந்திரி பருப்பு,அரை லிட்டர் பால், இருபது ஏலக்காய், அரைக் கிலோ நெய், அரைக் கிலோ பயத்தம் பருப்பு, சிறிதளவு குங்குமப்பூ, தேவையானஅளவு தேங்காய்த் துருவல்
செய்முறை:
Pongalஅரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியே எடுத்து வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதேவாணலியில் கொஞ்சம் நெய் விட்டு தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதேபோல் முந்திரிபருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு சட்டியில் 8 லிட்டர் நீர் ஊற்றி அடுப்பில் இட்டுக் கொதிக்க வைக்கவும். நீர் கொதித்தவுடன் அரிசி மற்றும் பருப்புகளைகலந்து போடவும். இவை நன்கு வெந்தவுடன் பாலை ஊற்றி நன்றாகக் கிளறவும். அவ்வாறு கிளறும்போது வறுத்த முந்திரிப்பருப்பையும், திராட்சைப் பழத்தையும் போட வேண்டும். நிதானமான சூட்டில் செய்வது முக்கியம்.
மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை உடைத்துப் போட்டு பாகு காய்ச்ச வேண்டும். பாகுபதமானதும், அடுப்பில் வேகும் சாதத்தில் கொஞ்சமாக கொஞ்சமாக ஊற்றி கிளறிவிட வேண்டும்.
பின்பு தேங்காய் துருவல், குங்குமப்பூ, நெய் ஆகியவற்றைச் சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து,இறக்கி விட்டால் சூடான சர்க்கரைப் பொங்கல் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum