தக்காளி, வெள்ளைப் பூண்டு ரசம்
Page 1 of 1
தக்காளி, வெள்ளைப் பூண்டு ரசம்
இந்திய சமையலில் ரசம் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும் இது உடலின் ஜீரணசக்தியை அதிகரிக்க வல்லது. ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு, சீரகம், மிளகு, பெருங்காயம் போன்றவை மருத்துவ குணம் கொண்டவை. ஹெவியான விருந்து சாப்பிடுபவர்கள் கண்டிப்பாக ரசம் ஊற்றி சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தேவையான பொருட்கள்
தக்காளி - 3
பூண்டு - 10 பல்
வரமிளகாய் – 2
சீரகம், மிளகு – 2 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கடுகு – கால் டீ ஸ்பூன்
உடைத்த உளுத்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன்
வெந்தையம் - கால் டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ரசம் செய்முறை
முதலில் சீரகம், மிளகு வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு மிக்சியில் லேசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை சிறிதுநேரம் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு நன்றாக பிசைந்து அதில் உப்பு, பெருங்காயத்தூள் போட்டு கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டு தாளிக்கவும். இதில் அரைத்து வைத்துள்ள விழுதினை போட்டு வதக்கவும். இதோடு கரைத்து வைத்துள்ள தக்காளி கரைசலை சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் விடவும். லேசாக நுரைத்து கொதிக்க தொடங்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான மணக்கும் தக்காளி, பூண்டு ரசம் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி, வெள்ளைப் பூண்டு ரசம்
» வெள்ளைப் பூண்டு
» வெள்ளைப் பூண்டு
» வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு!
» தக்காளி-பூண்டு சூப்
» வெள்ளைப் பூண்டு
» வெள்ளைப் பூண்டு
» வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு!
» தக்காளி-பூண்டு சூப்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum