சுவையான சேமியா அடை
Page 1 of 1
சுவையான சேமியா அடை
Semiya ada
சேமியா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதுவரை சேமியாவில் உப்புமா, தேங்காய்ப் பால் என்று தான் குழந்தைகளுக்குச் செய்து கொடுத்திருப்போம். இப்போது சிறந்த ஈவினிங் ஸ்நாக்ஸாக சேமியா அடை செய்து கொடுப்போமா!!
தேவையான பொருட்கள்
சேமியா - ஒரு கப்
கெட்டி தயிர் - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய், மல்லித்தழை, கறிவேப்பிலை
செய்முறை
சேமியாவை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அந்த வறுத்த சேமியாவைத் தயிரில் போட்டு 20 நிமிடம் ஊறவிடவும். பிறகு அதில் அரிசி மாவு, மிளகாய்த்தூள், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு போட்டுக் கலக்கவும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு இதனை அந்த கலவையில் போட்டு கலக்கவும்.
பிறகு தவாவை காய வைத்து சிறிது மாவை எடுத்து உருண்டையாக அடையாக தட்டவும். சுற்றி எண்ணெய் ஊற்றி இரு புறமும் வெந்ததும் எடுக்கவும்.
இதோ சுவையான சேமியா அடை ரெடி! இதனை சட்னி அல்லது சாஸூடன் சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum