தயிர் சேமியா
Page 1 of 1
தயிர் சேமியா
தயிர் உடலுக்கு மிகவும் சிறந்தது. அத்தகைய தயிரை நாம் சாதத்தில் பிசைந்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அந்த தயிரை சேமியாவுடன் சேர்த்து, ஒரு கலவை சாதம் போல் செய்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அந்த தயிர் சேமியாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சேமியா - 2 கப்
தயிர் - 3 கப்
தண்ணீர் - 1 கப்
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வர மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சர்க்கரை - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும் உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கொதி விட்டு, சேமியாவை போட்டு வேக வைக்க வேண்டும்.
சேமியா வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் அலசி, அந்த நீரை வடிகட்டிவிட்டு, சேமியாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிரில் ஊற்ற வேண்டும்.
பின் மிக்ஸியில் முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து, அரைத்து, தயிரில் போட வேண்டும்.
இறுதியில் வேக வைத்துள்ள சேமியாவையும் தயிரில் போட்டு, கிளற விட வேண்டும்.
இப்போது சுவையான தயிர் சேமியா ரெடி!!! இதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum