பேபிகார்ன் ஃப்ரை
Page 1 of 1
பேபிகார்ன் ஃப்ரை
பேபி கார்ன் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏனெனில் அது சற்று இனிப்பாக இருக்கும். அதனை சற்று வித்தியாசமான சுவையில், நாவை ஊற வைக்கும் வகையில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்ய, சற்று மொறு மொறுவென்று இருக்க, அதனை ஒரு ப்ரை போல் செய்து கொடுக்கலாம். அந்த பேபிகார்ன் ஃப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவவையான பொருட்கள் :
பேபிகார்ன் - 10
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் பேபிகார்னை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைப்பழச்சாறு, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறியப் பின், கார்ன் ஃப்ளார் சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்ட வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி காய வைத்து, பிரட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான பேபிகார்ன் ஃப்ரை ரெடி!!! பிறகு இதன் மேல் சிறிது கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம். மேலும் அத்துடன் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை
» பேபிகார்ன் தவாஅ ஃப்ரை
» வெண்டைக்காய் ஃப்ரை
» கிரீன் ஃப்ரை
» மஸ்ரூம் ஃப்ரை
» பேபிகார்ன் தவாஅ ஃப்ரை
» வெண்டைக்காய் ஃப்ரை
» கிரீன் ஃப்ரை
» மஸ்ரூம் ஃப்ரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum