சத்தான... இஞ்சி தால்
Page 1 of 1
சத்தான... இஞ்சி தால்
சாதாரணமாக தால் என்று சொன்னதும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பை வைத்து செய்வது தான் ஞாபகம் வரும். ஆனால் இப்போது உளுத்தம் பருப்பை வைத்து ஒரு தால் செய்யலாம். அதிலும் இந்த தால், இஞ்சி சுவையை மையமாக கொண்டு செய்யப்படுகிறது. இது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த இஞ்சி தாலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப் (ஒரு மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 2 இன்ச் (அரைத்தது)
தக்காளி - 2 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீர் விட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். பின் லேசாக கடைந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் இஞ்சியை போட்டு, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கியதும், அதோடு எலுமிச்சை சாறு மற்றும் வேக வைத்துள்ள உளுத்தம் பருப்பை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சத்தான இஞ்சி தால் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ரொட்டி அல்லது சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum