பாவகம் தரும் நன்மை தீமை பலன் நிர்ணயம் செய்வது எப்படி
Page 1 of 1
பாவகம் தரும் நன்மை தீமை பலன் நிர்ணயம் செய்வது எப்படி
பாவகம் தரும் நன்மை தீமை பலன் நிர்ணயம் செய்வது எப்படி ?
தாங்கள் தரும் விளக்கங்கள் உண்மையிலேயே வியப்பானது. நான் இதுவரை பல வலைப்பூக்களில் ஜோதிடத்தைப் பற்றியும்,அதன் நிர்வாகஸ்தர்கள் தரும் விளக்கங்களையும் படித்திருக்கிறேன்.அனைவரும்
அடிப்படைப்பாடங்களைப் பற்றி மட்டுமே தான் விளக்கம் தருகின்றனர்.எப்படியெனில் குரு உச்சமா?,சனி நீசமா?,5 ல் ராகு,கேதுவா?,சந்திரன் நீசமா? இப்படி ஒவ்வொருவரும் அதைப்பற்றி அவரவர் பாணியில் எழுதுகின்றனர். இப்படியிருக்க வேண்டும்,அப்படியிருக்க வேண்டும் எனவும் எழுதுகின்றனர். ஆனால் அந்த உச்ச, நீசம்,ஆட்சி,பகை,அஸ்தமனம் என்று ஒவ்வொரு நிலையும் பெற்ற கிரகங்கள் தனிமனித வாழ்வில் சில மன ரீதியான(குணங்கள்) பாதிப்புகளைத் தான் செய்கின்றன.
உதாரணத்திற்கு லக்கினத்தில் சூரியன் இருப்பவர்கள் எதிலும் வளைந்து கொடுக்கும் தன்மையற்றவர்களாகவும்,ஈகோ அதிகமுடையவர்களாகவும்,குரு இருந்தால் சமூகத்தில் மரியாதை மிக்கவர்களாகவும்,சனி இருந்தால் மிகவும் நிதானமான செயல்பாடு உடையவர்களாகவும் இருக்கின்றனர்.இது போல் 12 பாவகத்திற்கும் தகுந்தாற்போல் குணங்களை மாற்றுகின்றன. கிரக அமர்வு என்பது பற்றி ஜோதிட தீபம் எந்தமாதிரியான நிலைப்பாட்டை கையாள்கிறது. மேலும் ஒரு ஜாதகத்தின் தசா,புத்திக்கு ஜனன ஜாதகக் கிரக நிலையை ஜோதிடதீபம் எவ்வாறு பயன்படுத்துகிறது. பாரம்பரிய ஜோதிடத்தில் லக்கினாதிபன் 9 ல் இருந்தால் வரம் வாங்கி வந்தவன்,11ல் இருந்தால் அதிர்ஷ்டமுடையவன்,7ல் இருந்தால் தன்னம்பிக்கை,தன் முயற்சியுடையவன்,5ல் இருந்தால் புண்ணியம் செய்தவன் இப்படி ஒவ்வொரு பாவத்திற்கும் தகுந்தாற்போல் பலன்களைச் சொல்கின்றனர்.இது பற்றிய தங்கள் கருத்து என்ன?.
பதில் :
முதலில் ஒரு அடிப்படை விஷயத்தை மக்களும் , ஜோதிடர்களும் புரிந்து கொள்ள வேண்டும் , நவ கிரகங்களை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது மிகவும் அபத்தமான விஷயம் , ஒரு ஜாதகத்தில் நவகிரகங்கள் அமர்வு என்பது அவரவர் கருமைய ( கர்ம வினை பதிவு ) பதிவுகளின் அடிப்படையிலேயே அமைகிறது , அந்த கிரகம் அப்படி இருக்க வேண்டும் , இந்த கிரகம் இப்படி இருந்தால் யோகம் என்று யாரும் நவ கிரகங்களுக்கு கட்டளை இட முடியவே முடியாது , காரணம் தனது கடமையை நவ கிரகங்கள் எவ்வித தங்கு தடையும் இன்றி சரியாக செய்து கொண்டு இருக்கிறது , இருக்கும் . மேலும் நமது ஜாதகத்தில் என்ன இருக்கிறதோ அதை சொல்வது மட்டுமே ஜோதிடனின் கடமை , அதை விட்டு விட்டு அப்படி இருந்தால் நன்மையாக இருக்கும் , இப்படி இருந்தால் நன்மையாக இருக்கும் என்று சொல்வதெல்லாம் உச்சகட்ட நகைசுவையாகவே எங்களுக்கு தோன்றுகிறது .
இதை விட இந்த 20 பதாம் நூற்றாண்டின் நகை சுவை என்னவென்றால் நவகிரகத்தை தனது வேலைகாரர்கள் போல் எண்ணி அக்டிவேசன் டி அக்டிவேசன் செய்வதாகத்தான் இருக்கும் , மேலும் ஜோதிடத்தை பற்றிய புரிதல் என்பது மிகவும் குறைவாக உள்ள ஜோதிடர்களே இவ்வாறு பிதற்றி கொண்டு இருக்க கூடும் , அதாவது பல ஜோதிடர்கள் நவகிரகங்களின் பொது பலனையே தம்மை நாடி வரும் நபர்களுக்கு சொல்லி வருகின்றனர் , அது உண்மை அல்ல , ஒவ்வொருவருடைய சுய ஜாதக அமைப்பிற்கும் லக்கினம் முதற்கொண்டு 12 பாவக அமைப்பின் அடிப்படையிலேயே ஜோதிட கணிதம் கொண்டு காண வேண்டும்.
உண்மையில் ஜோதிட பலன் சொல்லும் முறையே தவறு என்றுதான் நான் சொல்வேன் எப்படி எனில் , மற்ற ஜோதிடர்கள் பொதுவாக ஒரு ஜாதகத்திற்கு பலனை நிர்ணயம் செய்யும் பொழுது நவகிரகங்கள் லக்கினத்திற்கு எப்படி இருக்கிறது என்ற அடிப்படையிலேயே பலனை சொல்லுகின்றனர் , இது முற்றிலும் தவறு , காரணம் ஒரு ஜாதகத்தில் லக்கினம் பற்றி தெரிய வேண்டும் எனில் லக்கினாதிபதி , அல்லது லக்கினத்தில் அமர்ந்த கிரகம் பார்த்த கிரகம் ஆகியவற்றை வைத்து லக்கினத்தின் தன்மையை நிர்ணயம் செய்து விட முடியும் , இதில் லக்கினாதிபதி உச்சமா ஆட்சியா , சமமா, நட்பா பகையா , நிச்சமா என்பதை பற்றி கவலை பட தேவையில்லை லக்கினத்திற்கு லக்கினாதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறார் என்று தெரிந்தாலே போதும்.
எடுத்து காட்டாக சிம்ம லக்கினத்திற்கு லக்கினத்தில் ஆட்சி பெற்று அமரும் சூரியனால் ஜாதகரின் லக்கினம் 100 சதவிகிதம் பாதிக்க படும், ஆனால் சிம்ம லக்கினத்திற்கு சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெற்று அமர்வது அளவில்லா வெற்றியை தரும் லக்கினமும் 100 சதவிகிதம் யோக நிலையை பெரும் , இதில் லக்கினத்தை ஏதாவது கிரகங்கள் அமர்ந்தாலோ பார்த்தலோ அதற்க்குண்டான நன்மை தீமை பலனையும் சேர்த்து லக்கினத்தின் முழு பலனையும் நிர்ணயம் செய்ய வேண்டும் , இந்த அமைப்பிலேயே அனைத்து பாவகங்களுக்கும் பலன் நிர்ணயம் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் , ஒவ்வொரு பாவகமும் என்ன நிலையில் இருக்கிறது என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , மேற்கண்ட முறையில் பாவகங்களின் நிலையை நிர்ணயம் செய்து விட்டால் , நடக்கும் திசை மற்றும் புத்தி என்ன செய்யும் என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , ஜாதக பலன் கேட்க்க வந்தவருக்கு உண்மையான சரியான ஜோதிட பலனை ஜோதிட கணித முறைப்படி தெளிவாக சொல்ல இயலும் .
பொதுவாக கிரக அமர்வு என்பது ஒவ்வொரு பாவக அமைப்பிற்கும் என்ன விதமான பலனை தருகிறது என்று கணிதம் செய்வதே சிறப்பு , மேற்கண்ட சிம்ம இலக்கின ஜாதகருக்கு லக்கினத்தில் சூரியன் அமர்ந்து அவருடனே ராகுவோ அல்லது கேதுவோ அமர்ந்தால் சூரியன் அமர்ந்ததற்கு உண்டான பலன் நடை பெற சிறிதும் வாய்ப்பே இல்லை , அங்கு அமரும் ராகுவோ கேதுவோ லக்கினத்திற்கு உண்டான முழுமையான பலனையும் எடுத்துகொண்டு பலனை தரும், பொதுவாக லக்கினத்தில் அமரும் சாய கிரகங்கள் லக்கினத்திற்கு 100 சதவிகிதம் நன்மையை மட்டுமே செய்யும் எனவே ஜாதகர் இலக்கின அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் நன்மையையே பெறுவார் என்பதே உண்மை.
இங்கே சூரியன் லக்கினத்தில் அமர்ந்தாலும் லக்கினத்திற்கு கெடுதலான பலனை செய்ய முடியாது , சாய கிரகங்களே லக்கினத்தை முழுமையாக ஆளுமை செய்யும் அதுவும் நன்மையான பலன்களையே செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை , இதுவே சாயா கிரகங்களின் தனி தன்மை . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ராகு கேது கிரகங்கள் லக்கினத்திற்கு உட்பட்ட பாகையில்தான் இருக்கிறதா ? என்று லக்கினம் ஆரம்பிக்கும் பாகை அமைப்பை கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டும் .
இதை போன்றே மற்ற பாவக அமைப்பினையும் ஜோதிட கணிதம் கொண்டு சரியாக கிரக அமர்வுகளை நிர்ணயம் செய்து பலன் கூறினால் ஜோதிட பலன்கள் துல்லியமாகவும் சரியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும் ஒரு கிரகம் ஆட்சி , உச்சம் பெற்றால் நன்மைகளை வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வதும் அதன் திசை புத்தி வந்தால் நன்மைகளை வாரி வழங்கும் என்று நிர்ணயம் செய்வதும் பொது பலன்களே , இந்த பலன்கள் சுய ஜாதகத்தை கட்டுபடுத்த வாய்ப்பே இல்லை , நீச்சம் அல்லது பகை பெற்ற கிரகத்தின் திசை நல்ல பாவகங்களின் பலனை தரும் என்றால் இங்கே அந்த நீச்சம் அல்லது பகை பெற்ற கிரகத்தின் திசை நன்மைகளையே வாரி வழங்கும் , ஆட்சி உச்சம் பெற்ற கிரகத்தின் திசை ஒருவேளை பாதிக்கபட்ட பாவகத்தின் பலனை செய்தால் ( குறிப்பாக பாதக ஸ்தான பலனை செய்தால் ) ஜாதகரின் நிலை மிகவும் பரிதாபமாக மாறி விடும் கிரகம் என்னவோ உச்சத்தில்தான் இருக்கும் அது தரும் பாவக பலன் ஜாதகரை தப்பி காய வைத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை .
ஒவ்வொரு கிரகமும் சுய ஜாதகத்தில் எங்கு எப்படி அமர்ந்தாலும் ஒவ்வொரு பாவகத்திர்க்கும் எவ்வித பலனை தருகிறது என்பதை மட்டும் நிர்ணயம் செய்து பலன் காணவேண்டும் , ஒவ்வொரு பாவகமும் எப்படி பட்ட நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதும் , நடப்பு திசை எந்த பாவகத்தின் பலனை தருகிறது அந்த பாவகம் நல்ல நிலையில் இருக்கிறதா பாதிக்க பட்டு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் , குறிப்பிட்ட பாவகம் நல்ல நிலையில் இருந்தால் நடப்பு திசை சம்பந்த பட்ட பாவக அமைப்பில் இருந்து நன்மையை தரும் , பாதிக்க பட்டு இருந்தால் சம்பந்தபட்ட பாவக அமைப்பில் இருந்து நடப்பு திசை தீமையான பலனை தரும் .
எனவே ஜோதிடதீபத்திர்க்கு ஜோதிட கணிதத்தை அடிப்படையாக கொண்டே பலனை நிர்ணயம் செய்யும் , எக்காரணத்தை கொண்டும் பொது பலனை ஜாதக பலனாக சொல்லி மக்களை முட்டாளாக மாற்றாது மக்களின் மூட நம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பொருள் ஆதாயம் தேடாது , ஜோதிடம் என்றாலே வாழ்க்கையை விதிப்படி நல்லதாக அமைத்துகொள்வது அல்லது விதியை ஏற்றுக்கொள்வது என்றுதானே பொருள் அன்பரே !
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஒன்பதில் அமர்ந்தால் மட்டுமே நன்மையை தரும் . தவிர சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு ஒன்பதில் அமர்ந்தால் ஜாதகருக்கு கெடுதலே செய்யும் .
அதே போலலக்கினாதிபதி மேற்கண்ட எந்த கிரகம் என்றாலும் லக்கினத்திற்கு பதினொன்றில் அமர்வது மட்டும் யோகத்தை தரும் ,
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஏழாம் பாவகத்தில் அமர்வது ஜாதகருக்கு 100 சதவிகிதம் கெடுதலே செய்யும், ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர்சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு ஏழாம் பாவகத்தில் அமர்வது ஜாதகருக்கு 100 சதவிகிதம் நன்மையை வாரி வழங்கும் .
ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் குரு, சுக்கிரன்,சூரியனுடன் சேராத புதன் , வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்கினதிபதியாக வந்து அவர்கள் லக்கினத்திற்கு ஐந்தில் அமர்வது ஜாதகருக்கு 100 சதவிகிதம் நன்மையை வாரி வழங்கும் , ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதி என்பவர் சூரியன் , தேய்பிறை சந்திரன் சூரியனுடன் சேர்ந்த புதன் , செவ்வாய் , சனி ஆகிய கிரகங்கள் இலக்கின அதிபதியாக வந்து லக்கினத்திற்கு ஐந்தில் அமர்வது ஜாதகரை பூர்வீகத்தை விட்டே ஒட்டி விடும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம்.2
» K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம்.1
» நன்மை பல தரும் உடற்பயிற்சி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
» K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம்.1
» நன்மை பல தரும் உடற்பயிற்சி
» நன்மை தரும் மனஉறுதி
» நன்மை தரும் மனஉறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum