மஸ்ரூம் கார்ன் மசாலா
Page 1 of 1
மஸ்ரூம் கார்ன் மசாலா
சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சற்று சுவையாக ஒரு மசாலா செய்து சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், அப்போது காளான் மற்றும் கார்ன் வைத்து, ஈஸியான முறையில் மசாலா செய்து சாப்பிடலாம். இப்போது அந்த மஸ்ரூம் கார்ன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம் (நறுக்கியது)
சோள மணிகள் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின்னர் அதனை குளிரை வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, மசாலா மற்றும் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
இந்த பதம் வந்த பின்னர், அதில் சோள மணிகள் மற்றும் காளானை சேர்த்து, அவை வேகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
பின்பு காளான் மற்றும் சோள மணிகள் வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான மஸ்ரூம் கார்ன் மசாலா ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum