சராசரி வாழ்க்கைக்கு ஜாதகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
Page 1 of 1
சராசரி வாழ்க்கைக்கு ஜாதகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?
கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்:
ஒரு ராசியில் பரல்களின் சராசரி அளவு என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
மொத்த பரல்கள் 337 வகுத்தல் 12 ராசிகள் = 28
அப்படி எல்லாம் எல்லோருக்கும் இந்த சராசரி அளவே அமைந்து விடாது.
அதனால் லக்கினத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளுக்கும்
பரல்களின் குறைந்த அளவு எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று
நமது முனிவர்கள் குறித்து வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அதைக் கீழே
கொடுத்துள்ளேன்.
1. லக்கினம் 25
2ஆம் வீடு - 22
3ஆம் வீடு 29
4ஆம் வீடு 24
5ஆம் வீடு 25
6ஆம் வீடு ............34
7ஆம் வீடு 19
8ஆம் வீடு 24
9ஆம் வீடு 29
10ஆம் வீடு ..........36
11ஆம் வீடு ...........54
12ஆம் வீடு 16
விளக்கம்: லக்கினத்தில் 25 பரல்கள் இருந்தால் போதும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக
இருக்கும் 2ஆம் வீட்டில் 22 பரல்கள் இருந்தாலே குடும்ப வாழ்க்கை அமையும்.
4ஆம் வீட்டில் 24 இருந்தாலே போதும் கல்வி கிடைக்கும். 28 பரல்கள் இல்லாமல்
போய்விட்டதே என்று மனம் நொடிந்து போகாமல் இருப்பதற்காக, ஆராய்ந்து
இதை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.
10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!
அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.
அவ்வாறு இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, கலாநிதிமாறன், ஜெயலலிதா அம்மையார்
போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் இருக்கலாம். எல்லோருக்கும் எப்படியிருக்கும்?
ஆகவே அதை வைத்து ஸீரியசாகி விடாதீர்கள் அங்கே 30 பரல்கள் இருந்தாலே போதும்.
அதே கதைதான் 11ஆம் வீட்டிற்கும். அங்கேயும் 30 பரல்கள் இருந்தாலே போதும்
உங்களுக்கு இந்தக் குறைந்த அளவு பரல்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.
இருந்தால் போதும். சந்தோஷமாக இருங்கள்!
---------------------------------------------------------------------
வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இளமை, நடு வயது, முதுமை
இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து
கொள்ள முடியுமா?
முடியும்!
1.மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் - இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை
இளமைப் பருவம்
2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
நடு வயதுக் காலம்.
3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
முதுமைக் காலம்.
இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம்
தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்
மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்
-------------------------------------------------------------
பாடம் 3
பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட
11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட
12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.
ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால்
கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்
10th house >11th house <12th house! = நல்லது!
10th house >11th house >12th house = நல்லதல்ல
---------------------------------------------------------------
4.
லக்கினத்தில் 30 பரல்கள் இருந்து, லக்கினநாதன் 4th or 10th or 11th அதிபதி உடன்
சேர்ந்து இருந்தால் ஜாதகன் கலங்கரை விளக்கு போல (Light House) அனைவருக்கும்
உதவியாக இருப்பான்.
-----------------------------------------------------------------
5. கேந்திர ஸ்தானங்களில் தீய கிரகங்கள் இருந்து 9,10, 11ஆம் வீடுகளில் 21 அல்லது
அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் நன்மையல்ல! விதி அந்த ஜாதகனைத்
திருவோட்டோடு தெருவில் நிறுத்திவிடும்.
-----------------------------------------------------------------
6.
லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த செளகரியமான வாழ்க்கை அமையும்.
(Luxurious life) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திருமணபொருத்தம் பார்க்கும் முன்பு ஜாதகத்தில் என்ன என்ன பார்க்க வேண்டும்
» ஜாதகத்தில் 5ஆம் இடத்திற்கான முக்கியத்துவம் என்ன?
» இலக்கியம் வாழ்க்கைக்கு என்ன சொல்கிறது
» ஜாதகத்தில் என்ன அறியலாம்? எந்த பகுதியில் அறியலாம்?
» மனிதர்களின் சராசரி வாழ்நாளைவிட அமெரிக்க அதிபர்களின் வாழ்நாள் அதிகம்!
» ஜாதகத்தில் 5ஆம் இடத்திற்கான முக்கியத்துவம் என்ன?
» இலக்கியம் வாழ்க்கைக்கு என்ன சொல்கிறது
» ஜாதகத்தில் என்ன அறியலாம்? எந்த பகுதியில் அறியலாம்?
» மனிதர்களின் சராசரி வாழ்நாளைவிட அமெரிக்க அதிபர்களின் வாழ்நாள் அதிகம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum