உருளைக்கிழங்கு குருமா
Page 1 of 1
உருளைக்கிழங்கு குருமா
கிழங்கு வகைகளிலேயே உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அத்தகைய உருளைக்கிழங்கில் எத்தனையோ ரெசிபிக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக பலருக்கு உருளைக்கிழங்கை சிப்ஸ் செய்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு அதனை பொரியல், வறுவல் என்று செய்து சாப்பிட பிடிக்கும்.
இப்போது அந்த உருளைக்கிழங்கை வைத்து எப்படி ஈஸியாக குருமா செய்வதென்று கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 6 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பட்டை - 1 இன்ச்
இலவங்கம் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
கசகசா - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்ஸியில் தேங்காய் மற்றும் கசகசா போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, இலவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு மசித்த உருளைக்கிழங்கு போட்டு வதக்கி, அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைப் போட்டு கிளறி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி!!! இதனை சாதம், சப்பாத்தி அல்லது பூரியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளைக்கிழங்கு குருமா
» சைவம் ஆலு மட்டர் மசாலா / உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
» அடை குருமா
» ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா
» உருளைக்கிழங்கு குருமா – Potato Kuruma
» சைவம் ஆலு மட்டர் மசாலா / உருளைக்கிழங்கு பட்டாணி குருமா
» அடை குருமா
» ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா
» உருளைக்கிழங்கு குருமா – Potato Kuruma
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum