தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பட்டியல்

Go down

கலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பட்டியல் Empty கலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பட்டியல்

Post  meenu Tue Feb 05, 2013 6:05 pm



http://www.tamilcnn.org/wp-content/uploads/2012/09/kaliyugam.gif
கலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பட்டியல் வியப்பை ஏற்படுத்தியது.அவை யாதெனில்
சுத்தமாக குளிக்காமல், அல்லது கலவி நடந்தபின்னர் ஆலயங்களில் பிரவேசித்தல்
தாய்,தந்தை,முத்தோர் ஆகியோரை போற்றாமல் உணவு உண்ணுதல்
பெரியவர்களிடம் பொருளை ஒரே கையால் வாங்குதல், அளித்தல்
இரண்டு பெரியவர்கள் நடுவே புகுந்து செல்லுதல்
புல்வெளியில் எச்சில் துப்புதல் அல்லது சிறுநீர்,மலம் கழித்தல்
நெருப்பை தாண்டுதல்
-
தன் தொடையில் வைத்து அன்னம் சாப்பிடுதல்
தன் மனைவியை பற்றி பிறரிடம் புகழ்ந்து கூறுதல்
ஆடை இல்லாமல் புண்ணிய குளத்தில் இறங்குதல்
பெரிஒய்ய்ர் அமருமாசனங்களை உதைத்து அவமதித்தல்
காரணமின்றி சிரித்தல்
-
விரல் நகங்களையும், ரோமத்தையும் பல்லினால் கடித்தல்
காலோடு கால் தேய்த்து கழுவுதல்
சாப்பிடும் பாத்திரத்தில் எச்சில் துப்புதல்
நெருப்பில் எச்சில் உமிழ்தல்
நேரை ஊற்றி நெருப்பை அணைத்தல்
படுத்தபடியும், சிரித்தபடியும் சாப்பிடுதல்
கரி,சாம்பல்,செங்கல் போன்றவற்றால் பல் துலக்குதல்
-
முதல்நாள் சமைத்த சாதம்,பழங்கறி,முட்டை,சுரைக்காய் ஆகியவற்றை உண்ணுதல்
பொழுதுவிடிந்தும் கண்விழிக்காது உறங்கல்
மாதவிலக்கு நாட்களில் மனைவியோடு சேரல்
எரியும் தீபத்தை வாயால் ஊதி அணைத்தல்…
-
பிற உயிர்களுக்கு தீங்கிழைத்தல்
தானம்,தருமம்,தியானம் ஆகியவற்றை கைவிடல்
அந்திபொழுதில் ஒளிதரும் விளக்கை கும்பிடாதிருத்தல்
பொய்சாட்சி கூறல்
பிறர்பொருளை கவர நினைத்தல்
பொய்,களவு,சூது,கொலை செய்தல்
-
தன் தலையில் தேய்த்து வழிந்த எண்னையை பிடித்து உடம்பில் தேய்த்து கொள்ளுதல்
துன்புறுத்தி இன்புறுத்தல்
விரல் நகத்தால் மலத்தை கீறுதல்
உயிர் கொல்லும் கொடியவர்களுடன் கூடி உறவாடுதல்
நல்லவர்களை கெட்டவர்கள் என கூறி இகழ்தல்
பாழடைந்த வீட்டில் படுத்துறங்கல்
-
மதுபானம் விற்றல், மதுபானம் அருந்த இணங்குதல்,மதுபானம் அருந்துபவருடன் பழகுதல்
சிவனையும், சிவனடியாரையும்,வேதம்,சிவாகமம்,ஸ்மிருதி,புராணம் முதலிய மேன்மை மிகுந்த வித்தைகளையும்,விபூதி,ருத்திராக்ஷங்களையும் இகழ்ந்துரைத்தல்
பூஜை,சிரார்த்தம்,போன்ற புண்ணீயநாட்களைல் நிகழ வேண்டிய சடங்குகளை நிகழ்த்தாதிருத்தல்
அத்தகைய நாட்களில் விருந்தாளிகளுக்கு சாப்பாடு போடாதிருத்தல்
பலர் நடுவே பிறரை பழித்துரைத்தல்
நையாண்டி செய்தல்
-
தாய்,மகள்,உடன்பிறந்தாள்,பிறர் மனைவி ஆகியோருடன் ஆண்மகன் தனியாக வசித்தல்
பெண்கள் தம் கணவனின் உருவத்தை தவிர பிற ஆடவனின் உருவத்தையும் நாடிபார்த்தல்,கை நொடித்தல்,கண்ஜாடை முதலான சாகசங்கள் செய்தல்
பிறர் வீட்டுக்குள் புழக்கடை வழியாக நுழைதல்
கீழோருக்கு எச்சிலை கொடுத்தல்
பிறர் நிழலை மிதித்தல்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum