வெண்டைக்காய் பொரியல்
Page 1 of 1
வெண்டைக்காய் பொரியல்
காய்கறிகளுள் ஒன்றான வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் அந்த வெண்டைக்காயை நீரிழிவு நோயாளிகள் சாப்பபிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். அத்தகைய தன்மை கொண்ட வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்தால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
இப்போது இந்த வெண்டைக்காயை வைத்து எப்படி பொரியல் செய்வதென்று பார்ப்போமா!!!
Delicious Ladies Finger Fry
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
பூண்டு - 2 பல்
தேங்காய் - 3 டீஸ்பூன் (துருவியது)
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, அதனை ஒரு துணியால் துடைத்து விட்டு, சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானதும், அதில் நறுக்கிய வெண்டைக்காய் போட்டு கிளறி, வெண்டைக்காய் வேகும் வரை அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.
வெண்டைக்காய் வெந்ததும், அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
இறுதியில் அத்துடன் துருவி வைத்துள்ள தேங்காய் போட்டு கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சூப்பரான வெண்டைக்காய் பொரியல் ரெடி!!!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பொரியல்
» சூப்பரான வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பச்சடி
» வெண்டைக்காய் பொரியல்
» சூப்பரான வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?
» வெண்டைக்காய் பொரியல்
» வெண்டைக்காய் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum