சிக்கன் விண்டலூ!
Page 1 of 1
சிக்கன் விண்டலூ!
தேவையான பொருட்கள்
கோழிக் கறி - 1 கிலோ.
நெய் - 3 தேக்கரண்டி.
கொத்தமல்லி - கொஞ்சூண்டு!.
நறுக்கிய வெங்காயம் - 1.
உப்பு - தேவைக்கேற்ப.
சீரகம் - 3 தேக்கரண்டி.
காஷ்மீர் மிளகாய் (காய்ந்தது அதாவது வத்தல்) - 12.
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி.
ஏலம் - 2.
பூண்டு - 10.
வினிகர் - 2 தேக்கரண்டி.
செய்முறை:
கோழிக் கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மசாலாவை வினிகரில் விட்டு நன்றாக கலக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் மசாலாவை இட்டு, வதக்கி வரவும். மெதுவாக கிண்டிக் கொண்டே வதக்கினால் நல்லது.
இப்போது கோழிக் கறியை அதில் சேர்த்து, உப்பையும் சேர்க்கவும். கொஞ்ச நேரம் அப்படியே வேக விடவும். கிண்டிக் கொண்டே வேக விட்டால் அடி பிடிக்காமல் நன்கு வேகும்.
இன்னொரு பாத்திரத்தில் உருளைக் கிழங்கு ஒன்றை எடுத்து நான்கு துண்டாக்கி போட்டு அதை வதக்கவும். பின்னர் அதை எடுத்து வெந்து கொண்டிருக்கும் கறியில் போடவும். போட்டாச்சா? ஒரு பத்து நிமிஷம் அப்படியே வேக விடவும்.
10 நிமிடங்கள் கழித்து கிரேவி லெவலுக்கு கோழிக் கறி வந்திருக்கும். அருமையான, சுவையான சிக்கன் விண்டலூ ரெடி! சாதத்துடன் சேர்த்து இதை பரிமாறவும். சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum