தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மட்டன் கோலா உருண்டை!

Go down

மட்டன் கோலா உருண்டை! Empty மட்டன் கோலா உருண்டை!

Post  ishwarya Tue Feb 05, 2013 1:58 pm

ஆட்டுக்கறி புரதச் சத்து நிறைந்தது. அதை பல விதங்களில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். மட்டன் கோலா உருண்டை வித்தியாசமான சுவையான உணவாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

எலும்பு நீக்கிய ஆட்டுக்கறி - கால் கிலோ

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தேங்காய் துருவல் - அரை கப்

பெருஞ்சீரகம் - 2 டீ ஸ்பூன்

பொட்டுகடலை மாவு – 1 கப்

மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கோலா உருண்டை செய்முறை

இளம் ஆட்டுக்கறியை பொடியாக நறுக்கி வாங்கவும். இது அரைப்பதற்கு எளிதாக இருக்கும். கறியை நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். கறியில் கொழுப்பு போன்றவை இருந்தால் அவற்றை நீக்கிவிடவும்.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.தேங்காய், பெருங்சீரகம் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கறியை போட்டு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். அதில் பொட்டுக்கடலைமாவு, தேங்காய், சோம்பு விழுது பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

அனைத்தையும் ஒன்றாய் சேர்த்து, கெட்டியாக நன்கு பிசையவும். தண்ணீர் சேர்க்கக் கூடாது. பின்னர் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை, ஒரு தடவைக்கு ஐந்து ஆறாக, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மட்டன் கோலா தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். [/b]

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum