இஞ்சி, எலுமிச்சை இறால் கிரேவி
Page 1 of 1
இஞ்சி, எலுமிச்சை இறால் கிரேவி
கடல் உணவுகளில் இறால் அதிக சத்து நிறைந்தது. இறாலை குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எளிதான இறால் சமையல் குறிப்பு உங்களுக்காக
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் நறுக்கியது – 1 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 1 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லி
இறால் கிரேவி செய்முறை
இறாலைத் தோல் நீக்கி, சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
சின்ன வெங்காயத்துடன், தக்காளி மல்லித்தழை,கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி நன்கு அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும். பின் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும். இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாரு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும்.
இத்துடன் கழுவிவைத்த இறாலைப் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். அதிக கிரேவி பதம் வேண்டும் என்பவர்கள். அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பத்து நிமிடத்தில் நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் தொக்கு தயார். இதனை இட்லி, சப்பாத்தி, தோசை மற்றும் எந்த சாதத்திற்கும் தொட்டு சாப்பிடலாம். சாதத்தில் போட்டும் பிசைந்து உண்ணலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இறால் உருளைக்கிழங்கு கிரேவி
» இறால் ப்ரை &கிரேவி
» இஞ்சி, எலுமிச்சை சூப்
» வாழைப்பூ கிரேவி
» சென்னா கிரேவி
» இறால் ப்ரை &கிரேவி
» இஞ்சி, எலுமிச்சை சூப்
» வாழைப்பூ கிரேவி
» சென்னா கிரேவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum