சென்னா கிரேவி
Page 1 of 1
சென்னா கிரேவி
பூரி, சப்பாத்தி வகைகளுக்கு மிகவும் சுவையான சைடு டிஷ் இது. புரோட்டின் சத்து மிகுந்த இந்த உணவு பதார்த்தத்தை உங்கள் தேவைக்கேற்ப தயாரித்து ருசிக்கலாம். இதோ செய்முறை:
தேவையானவை:
சென்னா கொண்டைக்கடலை (வெள்ளை) – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கரம்மசாலா – 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
ஆம்சூர் (மாங்காய்) பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
ரீபைன்ட் எண்ணெய் – 2 டீஸ்பூன்
பச்சை கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
முதல்நாள் இரவே சென்னா கடலையை தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் ஊறிய கடலையை குக்கரில் ஆறு விசில் வரை விட்டு நன்றாக வேக விடவும். வெங்காயம், தக்காளியை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் நெய்யுடன் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி அத்துடன் கரம்மசாலா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து சற்று கொதிக்க விடவும். அத்துடன் வேக வைத்த சென்னாவை சேர்த்து நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து பொடியாக நறுக்கிய பச்சைக்கொத்துமல்லி தூவி அலங்கரிக்கவும்.
வெஜிடபிள் பிரியாணி, பிரைடு ரைஸ் போன்றவற்றுக்கு கூட துணை பதார்த்தமாக பயன்படுத்த ஏற்றது இந்த சென்னா கிரேவி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னா ரசம்
» ஸ்பெஷல் சென்னா பிரியாணி
» ஸ்பெஷல் சென்னா பிரியாணி
» ஸ்பெஷல் சென்னா பிரியாணி
» சமையல்:சென்னா ரசம்
» ஸ்பெஷல் சென்னா பிரியாணி
» ஸ்பெஷல் சென்னா பிரியாணி
» ஸ்பெஷல் சென்னா பிரியாணி
» சமையல்:சென்னா ரசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum