சிக்கன் மொகலாய்
Page 1 of 1
சிக்கன் மொகலாய்
அசைவ உணவுகளில் அனைக்கம் பிடித்தது என்னவென்று கேட்டால் பெரும்பாலானோர் சிக்கன் என்று தான் சொல்வார்கள். அதிலும் வார இறுதியில் அனைவரது வீட்டிலும் சிக்கன் இல்லாமல் இருக்காது. அப்படி சிக்கன் வாங்கினால் குழம்பு, சிக்கன் கிரேவி என்று தான் செய்வோம். இப்போது சற்று வித்தியாசமாக வீட்டில் உள்ளோருக்கு சிக்கன் மொகலாய் செய்து கொடுத்து அசத்துவோமா!!!
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
தயிர் - 1/2 கப்
தேங்காய் - 1/4 மூடி
பட்டை - 2
லவங்கம் - 2
முந்தரி - 8
கசகசா - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
ஃப்ரஷ் கிரீம் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காயை துருவிக் கொள்ளவும்
பிறகு சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரியை ஒன்றாக போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து பட்டை, லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் இஞ்சிபூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அதில் தனியாத்தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பிறகு கழுவிய சிக்கனைப் போட்டு தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும்.
சிக்கனானது நன்கு வெந்ததும், அதில் அரைத்த மசாலாவை சேர்த்து உப்பை சரிபார்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு அதில் ஃப்ரஸ் கிரீம் சேர்த்து கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான சிக்கன் மொகலாய் ரெடி!!! இதனை சாப்பாடு, சப்பாத்தி போன்றவற்றோடு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum