மலபார் ஸ்டைல்... பிஷ் ப்ரை!!!
Page 1 of 1
மலபார் ஸ்டைல்... பிஷ் ப்ரை!!!
கேரளா என்றாலே அங்கு மீன் தான் ஸ்பெஷல். அதிலும் அவர்கள் மலாபாரில் செய்யும் பிஷ் ப்ரையின் சுவைக்கு அளவே இருக்காது. அவ்வளவு சுவையானதாக இருக்கும். அத்தகைய பிஷ் ப்ரையை வீட்டிலேயே விடுமுறை நாட்களில் சமைத்து, மதிய வேளையிலோ அல்லது ஈவினிங்கிலோ சாப்பிடலாம். இப்போது அந்த மலபார் ஸ்டைல் பிஷ் ப்ரையை எவ்வாறு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மீன் - 8 (ஏதேனும் ஒரு மீன்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். பின் கழுவிய மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பை சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மீன் நன்கு ஊறியதும், அந்த மீன் துண்டுகளில் கலந்து வைத்து கலவையை தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது சுவையான மலபார் ஸ்டைல் மீன் ப்ரை ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோக்கனட் பிஷ் ப்ரை
» ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை
» மலபார் சாம்பார்
» மலபார் பத்திரி நீங்களும் செய்யலாம்!
» வஞ்சிரம் சில்லி ஃ பிஷ் ரெசிபி
» ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை
» மலபார் சாம்பார்
» மலபார் பத்திரி நீங்களும் செய்யலாம்!
» வஞ்சிரம் சில்லி ஃ பிஷ் ரெசிபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum