தெய்வானை திருக்கல்யாணம்
Page 1 of 1
தெய்வானை திருக்கல்யாணம்
சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவ மயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரில் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலையில் தெய்வானை தபசு மண்டபம் சென்று, முருகனை மணந்து கொள்ள வேண்டி தவமிருப்பாள்.
மாலையில் குமரவிடங்கர் (முருகனின் ஒரு உற்சவர் வடிவம்), முருகனின் பிரதிநிதியாக மயில் வாகனத்தில் தபசு மண்டபம் சென்று தெய்வானைக்கு மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்.
நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு திருமணம் நடக்கும். மறுநாள் சுவாமி, தெய்வானையுடன் வீதியுலா செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கிரீடத்துடன் தெய்வானை
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» சென்னையில் 4 இடங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
» ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்
» சென்னையில் 4 இடங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
» ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum