தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமண வாழ்க்கை

Go down

 திருமண வாழ்க்கை  Empty திருமண வாழ்க்கை

Post  meenu Mon Feb 04, 2013 2:13 pm


வணக்கம் நண்பர்களே கடந்த பதிவில் திருமணத்தை பற்றி எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக களத்திர பாவத்தை பற்றி பார்க்கலாம். ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கோ திருமண வாழ்க்கை அமைவது எப்படி என்று பார்ப்பதற்க்கு இந்த களத்திர பாவத்தை வைத்துதான் பார்க்க முடியும். தனக்கு வருவது தேவதையா அல்லது பிசாச என்று பார்க்கலாம். அந்த பாவம் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று பார்க்கலாம்.

பொதுவான ஒரு விதி என்ன என்றால் ஏழாம் வீட்டில் நல்ல கிரகங்களும் இருக்ககூடாது. தீய கிரகமும் இருக்ககூடாது . சுத்தமாக இருக்க வேண்டும். ஏழாம் வீட்டு அதிபதி நல்ல இடத்தில் அமரவேண்டும். குருவின் பார்வையில் இருந்தால் நல்ல சிறப்பு. இப்படி எல்லாம் அமைவது என்றால் லட்சத்தில் ஒருவருக்குதான் அமைய வேண்டும். ஏதோ அவன் அவன் செய்த புண்ணியம் திருமண வாழ்க்கை நல்ல முறையில் ஒடிக்கொண்டிருக்கிறது.
இதில் அப்பா அம்மா செய்த புண்ணியம் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு சில இடங்களில் அப்பா அம்மா செய்த பாவங்கள் தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண வாழ்வில் மிக பெரிய பிரச்சினை உருவாகின்றது. இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் அனுபவத்தில் நான் பார்த்த ஜாதகங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது அவர்களின் தாய் தந்தை செய்த பாவங்களாக தான் இருக்கிறது.
ஏழாம் அதிபதி ஆட்சியில், உச்சத்தில் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமைகிறது. குருவின் பார்வையில் ஏழாம் அதிபதி இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமைகிறது. ஏழாம் வீட்டு அதிபதி உச்சம் அடைந்து அந்த பெண்னை திருமணம் செய்தால் திருமணத்திற்க்கு பிறகு அந்த பையன் புகழின் உச்சிக்கே சென்றுவிடுவான்.
ஏழாம் வீட்டை எந்த ஒரு பாவகிரகங்களும் பார்வை செலுத்தகூடாது அப்படி இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்க்கை நன்றாக அமையும். களத்திர காரகன் என்று சுக்கிரனை அழைப்பார்கள். சூரியனுடன் சுக்கிரன் அஸ்தங்கம் ஆககூடாது. சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.
மனிதனின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு ஜாதகத்தில் அனைத்து வீடுகளும் சேர்ந்து வேலை செய்தால் தான் ஒரு நிகழ்வு நடைபெறும் அதைபோலதான் திருமணமும். நாம் களத்திர இடத்தில் கெட்ட கிரகம் உள்ளது என்று அதற்கு பரிகாரம் செய்துகொண்டு இருப்போம் ஆனால் உண்மையில் தடை ஏற்படுத்தும் கிரகம் வேறு ஒரு வீட்டில் உக்கார்ந்து கொண்டு செய்யும் அதனால் ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பிறகு திருமண ஏற்பாட்டிற்க்கு செல்வது உத்தமம். பொருத்தம் பார்ப்பதை விட அவர் அவர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்வது நன்மை பயக்கும்.
முதலில் களத்திர வீடான ஏழாம் வீட்டைப்பற்றி பார்த்துவிடலாம். ஏழாம் வீட்டில் தீய கிரகம் அமர்ந்து திருமணம் இளம்வயதில் நடைபெற்றால் திருமண வாழ்க்கை பிரச்சினை சந்திக்கும். திருமண வாழ்க்கைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியது முப்பது வயதிற்க்கு மேல் இருக்கலாம். திருமண வாழ்க்கை இளம்வயதில் ஆரம்பித்தால் அந்த திருமணவாழ்க்கை பிரிவு ஏற்படும்.
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் கடுமையான செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தும். இருவரும் சண்டை சச்சரவு இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ள நபரை திருமண துணைவராக திருமணம் செய்தால் நன்மை பயக்கும். ஏழில் உள்ள செவ்வாய் அதிகபடியான காமத்தை தருவார். அதிக காமத்தை திருப்தி படுத்துவராக துணைவர் அமையவேண்டும்.
ஏழில் சனி இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிபோகும். திருமண பேச்சு முப்பது வயதுக்கு மேல் தான் ஆரம்பிக்கும். வரும் துணைவர் அழகாக இருக்கமாட்டார். வயது மூத்தவர் போல் தெரியும். நான் பார்த்தவரை ஏழில் சனி இருப்பவர்கள் பிரச்சினையை சந்திப்பது அவர்களுக்கு ஏழரை சனி, அஷ்டமசனி நடக்கும் நேரத்தில் தான் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள்.
ஏழில் ராகு அல்லது கேது இருந்தால் மனதில் தீய எண்ணம் ஏற்பட்டு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதனால் பிரிவும் ஏற்படுகிறது. இது திருமணத்திற்க்கு முன்பு தான் பல தடைகளை ஏற்படுத்துகிறது. இதை நம்ம ஆட்கள் முடிந்தவரை கோயில் சென்று பரிகாரம் செய்து திருமணத்தை நடத்திவிடுகிறார்கள்.
ஏழில் தீயகிரகம் மட்டும் தீங்குசெய்வதில்லை நல்ல கிரகங்கள் அமர்ந்தாலும் பிரச்சினை ஏற்படுத்தும். பெண்களுக்கு எட்டாம் வீடு மிக மிக முக்கியம் அந்த இடத்தில் எந்த கிரகமும் அமர்ந்தாலும் பிரச்சினை தான். நான் பார்த்த விதவை ஜாதகங்களில் எட்டாம் வீட்டில் சந்திரன் அமர்ந்தால் அந்த பெண் விதவை ஆகிவிடுகிறாள். நீங்களே இதை சோதனை செய்யலாம். நீங்கள் திருமண ஏற்பாட்டாளர்களின் வெப்சைட்டில் தேடி பார்த்தீர்கள் என்றால் இந்த உண்மை தெரியவரும்.
ஏழாம் வீட்டை வைத்து திருமண பிரச்சினையை பார்த்தோம். அடுத்தபடியாக லக்கினத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். லக்கினத்தில் கிரகங்கள் அமர்ந்துக்கொண்டு ஏழாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் வைக்கும் ஆப்பு இருக்கிறதே இது எல்லாத்தையும் விட கொடுமை இந்த மனிதனை திருமண வாழ்க்கையில் ஏன் தான் கடவுள் இந்த அடி அடிக்கிறாறோ தெரியவில்லை.
பொதுவாக லக்கினத்தில் தீயகிரகங்கள் அமர்ந்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினை அதிகம் ஏற்படுகின்றது.
ஏழாம் அதிபதி நன்றாகதான் இருக்கிறார் ஆனால் லக்கினத்தில் இருந்து சனி ஏழாம் வீட்டை பார்த்ததால் திருமண வாழ்க்கையில் இப்படி பிரச்சினையை உண்டு செய்துவிட்டார். பொதுவாக லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பது பிரச்சினையை உண்டு செய்துவிடும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை உருவாக்கிறது.
திருமண வாழ்கைக்கு மிக பெரிய உதவி செய்யும் வீடு இரண்டாம் வீடு. குடும்ப ஸ்தானம் என அழைக்கப்படும் இடம் அதனால் இந்த வீட்டையும் நன்றாக கவனிக்க வேண்டும். நமக்கு திருமணம் நடைபெறும் போது என்ன நடக்கும் நமது குடும்பத்திற்க்கு புதிதாக ஒருவர் வரவேண்டும். அப்பொழுது அந்த குடும்பத்தில் ஒரு நபர் கூடுதலாகிறார் என்று அர்த்தம். புதியதாக ஒருவர் வர வேண்டும் என்றால் குடும்பஸ்தானம் அவரை அனுமதிக்க வேண்டும். இரண்டாம் வீட்டில் கெட்ட கிரகங்கள் இருந்தால் அந்த நபரை அனுமதிக்காது .அனுமதி அளித்தால் தானே திருமணம் நடைபெறும். இது திருமணம் செய்வதற்க்கு முன்பே நமக்கு அடிக்கும் ஆப்பு.
பெண்களாக இருந்து இந்த வீட்டில் தீயகிரகங்கள் அமர்ந்தால் அவ்வளவுதான் இங்கு அமர்ந்து கொண்டு எட்டாம் வீட்டை பார்ப்பார்கள். பெண்களுக்கு எட்டாம் வீடு என்பது மாங்கலிய பாக்கியம் தரும் வீடு. மாங்கலியத்திற்க்கு பிரச்சினை பெண்களை பொருத்தவரை மாங்கலிய பாக்கியம் இருந்தால் தான் கட்டும் தாலி நிலைக்கும். எட்டாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் மாங்கலியத்தை பறித்துவிடும் இரண்டாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டை தீயகிரகங்கள் பார்த்தால் கணவன் வாழ்நாள்கள் குறைந்துவிடும்.
கடவுள் பெண்களுக்கு சிறந்த பக்தியை வைத்திருக்கிறார் அதனால் தான் பல பெண்கள் எந்த பிரச்சினையும் இன்றி நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். நான் பல குடுபங்களை பார்த்து இருக்கிறேன் அவர்களின் ஜாதகங்களில் நிறைய பிரச்சினை இருந்தும் அந்த வீட்டின் இல்லறதலைவி நன்றாக ஆன்மீகத்தில் ஈடுபாட்டுடன் இருந்தால் எந்த பிரச்சினையும் வராது.
ஒரு ஆண் மகன் சாமி கும்பிடுவதற்க்கும் ஒரு பெண் சாமி கும்பிடுவதற்க்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பெண்கள் சாமி கும்பிட்டு வேண்டினால் அந்த பிரத்தனையை கடவுள் உன்னிப்பாக கேட்கிறார் என்று தோன்றுகிறது அதை நிறைவேற்றி வைக்கிறார்.
ஒரு ஆண் ஒரு குலத்தெய்வத்தை மட்டும் தான் வணங்குகிறோம் ஆனால் ஒரு பெண் இரண்டு குலத்தெய்வத்தை வணங்குகிறாள். பிறந்த வீட்டில் ஒரு குலதெய்வம் புகுந்த வீட்டில் ஒரு குலதெய்வம் என்று இரண்டு குலதெய்வத்தை வணங்குகிறாள். உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் உங்கள் வீட்டில் உள்ள பெண்களை கடவுளிடம் வேண்ட சொல்லுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum