உங்கள் திருமண வாழ்க்கை 'ஆரோக்கியமா' இருக்கா?
Page 1 of 1

Couples
திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருப்பது என்பது வேறு, ஆரோக்கியமாக இருப்பது என்பது வேறு. திருமணத்திற்குப் பிறகு வரும் சின்ன சின்ன சண்டைகள் கூட திருமண வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான பகுதி. இப்படி சந்தோஷமாக இருக்கிறது என்றால் அது நம் தேவை பூர்த்தியானால் தான் அந்த சந்தோஷம் வரும். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் அதில் சந்தேகம், சுதந்திரம், பொறாமை என்று எதுவும் இருக்காமல் இருப்பது. இவை அனைத்தும் ஒரு சில சூழ்நிலையின் போதே தெரியும். சரி, இப்போது அந்த சூழ்நிலைகள் என்னென்னவென்று பார்போமா!!!
1. கணவன்மார்கள் அனைவருக்குமே தன் நண்பர்கள் கூட வெளியே செல்ல வேண்டும் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அவர்கள் வெளியே சென்றால் ஒரு சில மனைவிக்கு பிடிக்காது. அது எப்படி என்னை தனியாக விட்டு செல்லலாம் என்று சண்டை போடுவர். ஆனால் அப்படி ஏதும் சண்டையிடாமல், கணவருக்குப் பிடித்ததை செய்யட்டும் என்று, அவருடைய மனதை புரிந்து கொண்டு, எங்கு இருந்தாலும் அவர் என்னை நினைத்துக் கொண்டு இருப்பார் என்று நினைத்து இருப்பர். அப்போது அவர்கள் இருவருக்கும் ஒரு சிறு இடைவெளியிலும் ஒருவரை ஒருவர் நினைத்து இருப்பது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை ஆகும்.
2. நண்பர்களோடு வெளியே உணவு உண்ணச் சென்றாலும், எங்கு வீட்டிற்கு சென்றால் மனைவி/கணவன் தன்னை திட்டுவார்களோ என்று ஒருவித பயம் இல்லாமல் சுதந்திரமாக நண்பர்களோடு தங்கள் நேரத்தை செலவழித்தால், அதுவும் ஒருவித ஆரோக்கியமான வாழ்க்கையே.
3. வெளியே நடந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தன் கணவர்/மனைவியோடு ஒரு அழகான ஆண்/பெண்ணை பார்த்து, அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது. இதில் இருவருக்கும் இருக்கும் நம்பிக்கை நன்றாக தெரிவதால், இதுவும் ஒரு ஆரோக்கியமான வாழ்கையாக கொள்ளலாம்.
4. மனைவி ஒரு வீட்டு விஷேசத்திற்கு சென்று, தன்னை அழைத்து செல்ல கணவர் வருவார் என்று அவருக்காக காத்திருந்து, அவர் வர காலதாமதம் ஆனதால் கோபம் அடையாமல், வேலையின் காரணமாக தான் தன்னை அழைத்து வர முடியவில்லை என்று புரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கை.
5. இறுதியாக வங்கியின் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளுதல். திருமணம் ஆன பின்னர், நம்பிக்கை கொள்வது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் உண்மையாக இருப்பது.
ஆகவே இந்த ஐந்தில் மூன்று சரியாக இருந்தாலும், அந்த வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கையே!!! சரி, அப்ப உங்கள் வாழ்க்கைக்கு எத்தனை மதிப்பெண்?...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நிம்மதியற்ற திருமண வாழ்க்கை
» சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா!!!
» உங்கள் காதல் கைகூடுமா? உங்கள் கல்யாணம் எப்போது? திருமண ரேகையைப் பாருங்கள்!
» திருமண வாழ்க்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum