தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சட்டை முனி சித்தர்

Go down

சட்டை முனி சித்தர் Empty சட்டை முனி சித்தர்

Post  amma Sat Jan 12, 2013 5:44 pm


சதுரகிரி தலபுராணத்தில் சட்டை முனியின் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் இலங்கையில் ஆவணி மாதம் மிருக சீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார். போகர் இவரைத் தமது சீடராக சேர்த்துக் கொண்டார். போகரையடுத்து சில வருடங்கள் அகஸ்தியரிடமும் சீடராக இருந்ததாக குறிப்பிடுகின்றது. ஞானம் நிறைவெய்திய நிலையில்.

இவர் அந்த ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். பொதுவாக சித்தர்கள் தமது சாதனைகளை தீயவர்கள் அறிந்து கொண்டு தவறாகப் பயன்படுத்தி உலக மக்களுக்குக் கெடுதல் செய்து விடக்கூடாது என்பதற்காக பரிபாஷையிலேயே எழுதுவது வழக்கம்.

ஆனால் சட்டை முனியோ தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாகவே எழுத ஆரம்பித்தார். இவரது இந்தச் செயலால் கோபம் கொண்ட திருமூலர் இவர் எழுதிய தீட்சா விதி என்ற நூலை அழித்து விட்டதாக தெரிகிறது. சட்டை முனியின் நூல்களைக் குகையில் வைத்து பாதுகாக்கும் படி சிவபெருமான் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்தில் இருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூஜை முடிந்து கோவில் கதவு அடைக்கப்பட்டு விட்டன.

ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாக திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்கு கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டை முனி "அரங்கா!'' என்று கத்திய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர்.

அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் முன் நின்ற சட்டைமுனி இறைவனுடன் ஒன்றாகக் கலந்து மறைந்தார். சட்டைமுனி சித்தர் ஜீவ சமாதி ஸ்ரீரங்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சட்டை முனியை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சித்தால் நல்லது.

ஓம் ஸ்ரீம் சட்டை முனி சுவாமியே போற்றி'' என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். சட்டை முனி நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பார்.

இவரை வழிபட்டால் சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை அகலும். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும். சரியாகப் படித்தாலும் பரீட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும். மூளையில் ரத்தம் உறைதல், மனஉளைச்சல், வீண்பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும்.

கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும். போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். சட்டை முனி சைவராதலால் சீர்காழியிலேயே ஜீவசமாதி அடைந்தார் என்றும் அத்தல் மூலவரின் பெயர் சட்டைநாதர் என்றிருப்பதையும் சான்று காட்டுகிறார். சட்டை முனி சீர்காழியில் சித்தி பெற்றார் என்று போகர் ஜனன சாகரம் கூறுகிறது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum