நாய் வாங்கும்முன் நினைவில் கொள்ள வேண்டியவை
Page 1 of 1
நாய் வாங்கும்முன் நினைவில் கொள்ள வேண்டியவை
வீட்டில் ஆசைக்கு செல்லமாக வளர்க்க நாய் வாங்குகிறோம் என் றால் அதற்கு ஒரு புதிய உயிரை குடும்பத்தில் சேர்க்கிறோம் என்று அர்த்தம். ஆனால் அவ்வாறு வீட்டில் வளர்க்க நாயை தேர்ந்தெ டுக்கும் போது ஒரு பெரிய குழப்பமே மனதி ல் நிலவும். ஏனெனில் தற்போது நிறைய செல்லப்பிராணிகள் இருக் கின்றன. ஆகவே எதை வளர்த்தால் சரியானதாக இருக்கும என்ற குழப் பம் மனதில் பெரிதும் இருக்கும். அதிலும் நாயை வாங்கிவிட்டு, பின் ஒரு சிறு தவறு நடந்தாலும், பிறகு அனைத்துமே தவறில் முடிந்து விடும். ஆகவே மிகவும் கவனத்து டன் இருக்க வேண்டும். இப்போது நாயை வாங்கும்முன் எவற்றை யெல்லாம் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பார்ப்போமா !!!
tips choosing the right dog
.
* நாயை வாங்குகிறோம் என்றால் முதலில் எதற்கு வாங்க வேண்டும்? என்று யோசிக்க வேண்டும். ஏனெனில் அதற்கு காரணம் நிறைய உள்ளன. அதாவது மிகவும் பிடி க்கும் என்பதற்காக, பாதுகாப்பிற்காக அல் லது ஒரு நல்ல துணையாக இருப்ப தற்காக என்ற காரணங்களுள் ஏதே னும் ஒன்றை தெளி வாக யோசித்துக் கொண்டால், பின் அதற்கேற்ப நாயை வாங்குவது என்பது எளிதாகி விடும். ஏனென்றால் நாய்களுள் பல வகை கள் உள்ளன. ஆகவே எதற்கு என்பது தெளிவாகி விட்டால், வாங்கு வது ஈஸியாகிவிடும்.
.
* மற்றொன்று நாயை வாங்கி யப் பின் அதனை நம்மால் சரியாக கவனிக்க முடியுமா? என்பதனையும் தெளிவாக யோசித்துக் கொள்ள வேண்டும். அதிலு ம் வேலைக்கு செல்பவர்கள் நாயை வாங்கு வதற்கு முன் பல முறை யோசி க்க வேண்டும். நாயை வாங்கினால் அதனை அடிக்கடி வெளியே அழைத்து செல்வது, அதனுடன் விளையாடு வது என்று அதனுடன் நேரத்தை செலவழி க்க வேண்டு ம். ஏனெனில் நாய் எப் போதும் தனிமையை விரும்பாது. இல் லை, முடியாது என்று இருப்பவர்கள், நாய் வாங்கும் எண்ணத் தை கைவிடுவது நல்லது.
.
* நாயை வாங்கினால், நம்மால் அதனை சரி யாக பராமரிக்க முடியுமா? என்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் நாயை பராமரிப் பது என்பது எளிதானது அல்ல. அதற்கு நிறைய செலவாகும். அத னை அடிக்கடி கால்நடை மருத்து வரிடம் அழைத்துச் செல்லுத ல், அதற்காக கடைகளி ல் விற்கும் உணவுகளை வாங்கி கொடுத்தல், அதன் ஆரோக்கியத்தி ற்கு வேண்டி யவற்றை செய்தல் போன்ற அனைத் தையும் நினைத்து, பின் வாங்க வேண்டும்.
.
* வீட்டி ற்கு எந்த மாதிரியான நாயை வாங் க வேண்டும். இப்போது வீடு சிறிய தாகவும் நாய் பெரியதாகவும் இரு ந்தால், அவற்றை பராம ரிப்ப து என்பது கடினமாகிவிடும். ஏனென் றா ல் அது செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவில்லாமல், அதனை கட் டுப்படுத்துவது என்பது கடினமாகிவிடும். ஆகவே சிறிய நாயை வாங்கினால், அதனை நாம் பழக்கப்படுத்தி, கட்டுப்படுத்தி விடலாம். ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண் டு, நாயை வாங்கினால், எந்த ஒரு பிரச்சனையுமின்றி, அதனுடன் சந்தோஷ மாக விளையாடி மகிழலாம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்
» நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்
» தாலி – தெரிந்துக் கொள்ள வேண்டியவை
» பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
» கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
» நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள்
» தாலி – தெரிந்துக் கொள்ள வேண்டியவை
» பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
» கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum