யார் இந்த சனீஸ்வர பகவான் ?!?!
Page 1 of 1
யார் இந்த சனீஸ்வர பகவான் ?!?!
ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும். கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்பர்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
சனி பவானுக்குரிய கோவில்களில் உள்ள தீர்த்ததில் நீராடி தக்கதான தருமங்களை செய்வது பயன்தரும். இவை இரண்டும் செய்ய இயலாதவர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே உள்ள சனீஸ்வர பகவானை மனமுருகி வழிபட்டு தினசரி காக்கைக்கு அன்னமிடுவதுடன் எள் தீபம் ஏற்றி வருவது மற்றொரு வகை சாந்தி பரிகாரம் ஆகும்.
சைவர்களாக இருந்தால் சிவபுராணம், பஞ்சாட்சர ஜெபம் செய்வது உத்தமம், வைஷ்ணவர்களாக இருந்தால் சுதர்சன மூல மந்திரம், ஜெபம், சுதர்ஸன அஷ்டகம், ஆஞ்சநேயர் கவசம் போன்றவற்றை வாசிக்கலாம். அல்லது ஜெபிக்கலாம். இதனால் சனியின் இன்னல்கள் நீங்கி சங்கடங்கள் அகன்று சர்வ மங்களம் பெருகும்.
கந்த சஷ்டி கவச பாராயணமும் சனி பகவானின் கோபத்தை தணிக்கும். தாரித்ரிய தஹன ஸ்தோத்திரத்தை வாசிக்க நலங்கள் விளையும். பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் பிறவிப்பிணி அகலும் பிறப்பின் பயன் புலப்படும். சனி பகவான் கோசார ரீதியில் வரும் போது ஏற்படும் நோய்களுக்கு மருந்து என்ன தெரியுமா? காராம் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு அளிக்கலாம்.
இதனை அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று அல்லது ஜென்ம தினத்தன்று வரும் சனிக்கிழமையன்று அல்லது சனி பிரதோஷம், சோம பிரதோஷம், செவ்வாய் பிரதோஷம், குரு பிரதோஷம் ஆகிய தினங்களில் அல்லது ஜென்ம, வாரம் அல்லது ஜெனன திதி ஆகிய நாட்களில் அளிக்கலாம். சிவதரிசனம் செய்வதும் சிவனின் உடல் பூராவும் கருத்த பசுவின் பாலை அபிஷேகம் செய்வதும் நலம். சிவதரிசனம் செய்பவரை, சிவபூஜை செய்பவரை சனீஸ்வர பகவான் பாதிப்பது இல்லை.
சனி கிரக பாதிப்பு இருப்பவர்கள் பொதுவாக எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் உதவிகள் செய்தால் சனி பகவானின் பூரண அருளை பெறலாம். சனிபகவான் உச்சம் பெற்ற திருநள்ளாறு, திருகொள்ளிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை தரும்.
ஜாதகத்தில் சூரியனும் சனியும் உச்சம் பெற்று இருந்தால் பித்ரு தோஷம் என்று கொள்ள வேண்டும். இதற்கு உரிய பரிகாரம் தில ஹோமம் செய்வதுதான். மேலும் சனிக்கிழமைகளில் சனியையும் ஞாயிற்றுக்கிழமை சூரியன் மற்றும் சிவபெருமானை வணங்கினால் தோஷங்கள் மறையத் தொடங்கும் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவர்களுக்கும் சனியின் இருள் விரைவில் கிடைக்கும். அவர்களுக்கு சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம்,நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனீஸ்வர தீபம்.......
முக்கூட்டு எண்ணெய் (நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்)யினால் ஓர் இரும்புச் சட்டியில் வெள்ளை,கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் திரியாக இட்டு மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
புஷ்பாஞ்சாலி....
சனி பகவானுக்கு வன்னி மலர் மற்றும் நீலோற்பல மலர் மிகவும் விருப்பமானது. சனி பகவானுக்கு உரிய சனிக்கிழ
பலவிதக் கொடுமைகளுக்கும் காரண பூதனாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங்களை பெற்று உன்னதமாக பிறருக்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள். சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார்.
ஒரு நியாயமான கிரகம். மனிதர்களின் பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர் இவரே. உலகுக் கெல்லாம் ஒளியை அள்ளி வீசும் சூரிய தேவனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு,யமுனா என்ற மூன்று குழந்தைகள் உள்ளன. சுவர்ச்சலாவுக்கு சூரியனின் அன்பான அணைப்பு அதீதமான உஸ்ணமாகத் தகித்தது.
சுவர்ச்சலாவால் தாங்க முடியவில்லை தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அவளுக்குப் பெயர் சாயாதேவி. தான் தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடைசெய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.
சாயாதேவிக்கு தப்தி (பத்திரை) சாவர்ணிக மனு சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். சாயாதேவி தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்பு மாற்றாந் தாயைப் போல் நடந்து கொண்டாள். சூரியனும் யமனும் அவளை மன்னித்து விட்டார்கள். சூரிய தேவன் சுவர்ச்சலா தேவியைத் தேடிக் கண்டுபிடித்து தீராத காதலுடன் தழுவினான்.
சூரியனின் காந்த சக்தியால் சுவர்ச்சலா தேவிக்கு அப்பொழுது பிறந்தவர்கள் தான் அசுவினி தேவர்கள். இந்நிலையில் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தாள். அதிலும் சிருதகர்மாவைத் (சனி) தவிர மற்றவர்கள் பேரும் புகழும் பெற்றிருந்தார்கள். மேலும் சிருதகர்மாகவின் கண்கள் அதீதவீர்யமுள்ளவை.
எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். அதனால் சாயாதேவி அவனை வெளியே விடாமல் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் விண்ணுலகமே கயிலையை நோக்கிச் சென்றது. கயிலையில் விநாயகப் பெருமானுக்குப் பிறந்த நாள். எல்லோரும் கயிலையில் நடக்கும் விழாவைக் காணச் செல்வதால் தானும் அங்கு செல்ல வேண்டும் என்று சிருதகர்மா அடம் பிடித்தான்.
சாயாதேவி எத்தனையோ சொல்லியும் சிருதகர்மா கேட்கவில்லை. இறுதியில் பிடிவாதம் வென்றது. கயிலை மலையின் ஓர் ஓரத்தில் நின்று விழாவைக் கண்டுகளித்து விட்டு வருமாறு அன்னை ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தாள். கயிலையில் சிருதகர்மா காலடிவைத்ததுமே கயிலை மலை ஒரு குலுங்கு குலுங்கியது.
இதை மலைமகள் பார்வதியும் உணர்ந்தாள். சக்தி சூரியனின் குமாரன் சிருதகர்மா இதோ வந்து கொண்டிருக்கிறான். அவன் பார்வைபடா வண்ணம் குழந்தை விநாயகனைப் பார்த்து கொள் என்று சிவபெருமான் கூற, அன்னை மகன் விநாயகனை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். சக்திக்கு மீறிய கவசம் எது?ஆனால் சிருதகர்மா விநாயகனைப் பார்த்துவிட அவனின் பார்வைத் தீட்சண்யத்தால் விநாயகனின் தலைதெறித்து விழுந்தது.
பார்வதி கதறினாள். சிவபெருமாள் மனைவியைச் சமாதானப்படுத்தினார். கஜமுகாசுரனை சம்ஹாரம் பண்ணப் பிறந்தவன் நம் குமாரன் விநாயகன். அதற்கு சாதாரண முகம் உதவாது. யனையின் முகம் தான் வேண்டும் என்று சமாதானம் சொன்னார். பைரவனை அனுப்பி வடக்கு திக்கில் தலைவைத்துப் படுத்திருக்கும் யானையின் தலையைக் கொண்டு வரச் சொன்னார்.
காசி அருகே படுத்துக்கிடந்த யானை ஒன்றின் தலையை பைரவன் கொண்டு வந்து கொடுத்தார். அது முதல் விநாயகர் கஜமுகன் ஆனார். புதல்வனின் தலையைப் பார்க்க பார்க்க பார்வதி தேவியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கோபமாக வந்தது. கயிலையில் காலெடுத்து வைத்த உன்பாதம் ஊனமாகட்டும் என்று சபித்தாள்.
அன்று முதல் விந்தி நடந்ததால் சனி. ஆனால் விந்தி விந்தி வீடு திரும்பிய சிருதகர்மாவைக் கண்டு சாயாதேவி வெகுண்டாள். பார்வதியின் மகனான விநாயகனின் வயிறு ஓநாய் வயிறாகட்டும் என்று சபித்தாள். விநாயகரின் வயிறு பெருத்தது. அன்று முதல் விநாயகன் லம்போதரன் ஆனார். சனி என்ற சிருதகர்மா தவம் ஒன்றே சரியான வழி என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.
தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார்.
‘’சிருதகர்மா உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய் இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும் தான்.மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வரனான உனக்குத் தான் நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குத் தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும்.’’ என்றார்.
சிருதகர்மா அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறார்
Posted by narayanasamy jagadeesan at 02:10
Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
No comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Blog Archive
▼ 2013 (326)
► February (10)
▼ January (316)
இராகு கேது தோஷம்
விவாக ரத்து ஏற்படும் ஜாதக ரீதியான அறிகுறிகள்:
7ல் சுக்கிரன்
காதல், கலப்பு,ஆத்மாத்தமான,வெற்றிகரமான திருமணத்திற்...
காதல் திருமணம்
நல்ல காலம் எப்போது?
கணவன் பேச்சைக் கேட்காத மனைவி
சுக்கிரனால் ஏறுமுகம்
வாகனயோகம் யாருக்கு
ராகு கேதுவாயோகல் ம்
கண்களில் கோளாறு?
8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வதால் பலன்
மேஜிக் எண் 108
லக்கினத்தில் கேது
கேதுவால் யோகம்
எப்போது திருமணம்
வாழ்க்கைச்சிறை
பானு யோகம்
நிம்மதி யோகம்
மாகா புண்ணியவான்கள் யார்?
வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை
தூக்கம்/நடை
சரஸ்வதி யோகம்
எப்போது திருமணம்?
12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜ...
முன்னோர்களின் உருவப்படங்களை தெய்வப் படங்களுடன் வைத...
HARD DISK-ஐ பாதுகாப்பது எப்படி?
யாரெல்லாம் வைரம் அணியலாம் ..
நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்.....
எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலா...
வெளிநாடு யோகம்
சொந்தத்தில் திருமணம்
காதல், கலப்பு திருமணம் ஏற்படமா?
திருமண வாழ்க்கை இல்லாத நிலை
திருமணம் எப்பொழுது நடக்கும்?
ஆபரண யோகம்
வண்டி வாகன யோகம்
கல்வி
கற்பு
வெளியூர், வெளிநாடு யோகம்
படிகட்டுகள்
வரவேற்பறை - ஹால்
பூஜை அறை
சமையலறை
படுக்கையறை
குளியல் மற்றும் கழிவறை
கதவு ஜன்னல் வைக்கும் முறைகள்
பிரதான வாயில் கதவு வைக்கும் இடம்
வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
அன்னதானத்தின் அவசியம் தெரியுமா?
மரணயோகம்
பாட்டியம் என்பது என்ன?
ஜோதிடம் பொய்ப்பது ஏன் ?
வீடுகளில் இருந்து வடக்கு நோக்கி கழிவுநீர் வெளியேறல...
வாகனத்தை பன்றியின் மீது மோதி விட்டால் உடனடியாக விற...
தலைச்சம் பிள்ளைக்கு திருமணம் செய்யும் போது கவனிக்க...
எண்ணெய், உப்பு போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து ...
ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது எப்படி? நடைமுறைப...
ஒருவரின் ராசிக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு...
செய்யக்கூடாதவை
சமையலறை
அமாவாசையன்று பிறந்தவர்கள்
புனர்பூ தோஷம்
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்1
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்
விஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?
சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?
சீதை தீக்குளித்தது ஏன்?
மகாபெரியவர் அருளிய கிருஷ்ணாவதாரத் தத்துவம்!
துளசி இலையைப் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?
மாமனித யோகம்
ஆதி யோகம்
பாஸ்கரா யோகம்
சகடயோகம்
லக்ஷ்மியோகம்
கேமதுருமா யோகம்
கிரகமாலிகா யோகம்
ராஜயோகம்
துஷ்கிரிதியோகம்
குஹு யோகம்
வஞ்சன சோர பீதி யோகம்
பத்ரா யோகம்
ஹம்ஸ யோகம்
மாளவ்ய யோகம்
சஷ்ய யோகம்
பரிவர்த்தனை யோகம்
சந்திரமங்கள யோகம் ”சசிமங்கள” யோகம்
கஜகேசரி யோகம்
புத ஆதித்யா யோகம்
அனபா யோகம்
ருச்சகா யோகம்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்
» அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில்
» அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
» வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum