கோயில்களில் தரிசனம் செய்யும் போது செய்யக்கூடாதவை எவை தெரியுமா?
Page 1 of 1
கோயில்களில் தரிசனம் செய்யும் போது செய்யக்கூடாதவை எவை தெரியுமா?
Temple images
புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது. இடது கையினால் தண்ணீர் அருந்தக்கூடாது
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» கர்ப்பிணிகள் முகப்பருவிற்கு சிகிச்சை செய்யும் போது..
» தசைகள் விரிவுபடுத்தும் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum